சிறைச்சாலைகளில் தீவிரமடையும் கொரோனா – அனைத்து ஊழியர்களினதும் விடுமுறைகள் ரத்து!!

இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில், கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவிக்கின்றார்.
இதன்படி, சிறைச்சாலைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தற்போது 437 வரை அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, சிறைச்சாலைகளில் கடமையாற்றும் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. நாளை காலை 8.00 மணிக்கு முன்னர் அனைவரும் கடமைகளுக்கு சமூகமளிக்க வேண்டும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.
குருவிட்ட, புஸா, வெலிகட, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, பழைய போகம்பர, தும்பர, மாத்தறை ஆகிய சிறைச்சாலைகளில் கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் இதுவரை காணப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லண்டன் பயணம் செய்வதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்குச் சென்றிருந்த ஒருவருக்கு கோரோனா!!
389 பேருக்கு நேற்று கொரோனா – தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 16,583 ஆக அதிகரிப்பு!!
கம்பஹாவில் களனி பகுதி முடக்கப்படுகின்றது – வத்தளை உட்பட ஆறு பகுதிகளின் தனிமைப்படுத்தல் தொடரும்!!
நாட்டின் பல பகுதிகள் சமூகபரவலை எதிர்கொள்ளும் நிலையில் உள்ளன- பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!!
நவம்பர் 15 வரை பயணிகள் பேருந்துகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன?
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது!!
கிளிநொச்சி, கோணாவில் யூனியன் குளம் முருகன் கோவிலடியில் வசிக்கும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று!!!
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு செல்ல தயாரான நபர் மரணம்!!