ருமேனியாவில் கொரோனா ஆஸ்பத்திரியில் தீவிபத்து – 10 பேர் பலி..!!

ஐரோப்பிய நாடான ருமேனியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்காக அங்குள்ள பியட்ரா நீம்ட் கவுன்டி ஆஸ்பத்திரியில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் இந்த ஆஸ்பத்திரியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது.
இதில் 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். டாக்டர் உள்பட 7 பேர் படுகாயம் அடைந்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.