;
Athirady Tamil News

பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து 45 மணி நேர மணிக்கூண்டு டாஸ்க்.. நேரத்தை கணிக்க போராடும் ஹவுஸ்மெட்ஸ்! (வீடியோ, படங்கள்)

0

சென்னை: பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து 45 மணி நேரம் மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது முதல் புரமோவின் மூலம் தெரியவந்துள்ளது.

பிக்பாஸ் வீட்டில் நேற்று நாமினேஷன் மற்றும் காதல் கண்ணை மறைக்குது போன்ற பிரச்சனைகளை வைத்து ஓட்டினர்.

இந்நிலையில் இன்று ஹவுஸ்மெட்டுகளுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

45 மணி நேர டாஸ்க்

அதன்படி தொடர்ந்து 45 மணிநேரம் மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பிக்பாஸ் வீட்டின் கார்டன் ஏரியாவில் கடிகாரம் போன்ற செட் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஹவுஸ்மெட்ஸ் சின்ன முள், பெரிய முள், நொடி முள் என உள்ளனர்.

மழையிலும்..

போட்டியாளர்கள் 5 குழுக்களாக பிரிந்துள்ளனர். அவர்கள் நேரத்தை நிர்ணயிப்பதற்கு ஏற்ப பிக்பாஸ் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகள் நடைபெறுகிறது. இதில் மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தப்படி போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கேஸ், தண்ணீருக்கு கட்டுப்பாடு

இந்த டாஸ்க்கில் குறிப்பிட்ட நேரம் மட்டுமே கேஸ் மற்றும் தண்ணீர் வழங்கப்படுவதாக தெரிகிறது. பிக்பாஸ் வீட்டுக்குள் ரயில் எஞ்சின் கொண்டு வரப்பட்டுள்ளது. பாலாஜி சுண்டல் விற்கிறார். பெண் போட்டியாளர்கள் குடத்தில் தண்ணீர் தூக்கி செல்கின்றனர்.

ரசிகர்கள் குற்றச்சாட்டு

இவையெல்லாம் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோ தெரியவந்துள்ளது. பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சொல்லும் படியான டாஸ்க் கொடுக்கப்படுவதில்லை, வெறுமனே பேசவிட்டும் கண்ணீர் விட வைத்தும் போரடிக்க வைப்பதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

கடந்த முறை முட்டை

இந்நிலையில் கடுமையான டாஸ்க்கை கொடுத்து ஹவுஸ்மெட்ஸ்களை ட்ரில் வாங்கியுள்ளார் பிக்பாஸ். இந்த மணிக்கூண்டு டாஸ்க்கால் போட்டியாளர்கள் பம்பரைமாய் சுழல்வது புரமோவில் தெரியவந்துள்ளது. கடந்த லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கில் முட்டை வாங்கியதால் இம்முறை கண்ணும் கருத்துமாய் உள்ளனர் என்றும் தெரிகிறது.










“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − 13 =

*