;
Athirady Tamil News

ஹைஜீனிக்கே இல்லை.. 15 பேருக்கு 2 டாய்லெட்? கமலை தொடர்ந்து பிக் பாஸையும் விட்டு வைக்காத அனிதா! (வீடியோ, படங்கள்)

0

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழைய பட வசனங்கள் போல பிக் பாஸ் போட்டியாளர்கள் கற்பனையாக பேசி நடிக்க வேண்டும் என்கிற டாஸ்க் கொடுக்கப்பட்டது.

நிஷா, அனிதா சம்பத் – ஆரி மற்றும் ரியோ – கேபி – ரமேஷ் நாடகங்கள் மட்டுமே நிகழ்ச்சியில் போடப்பட்டன. பாலாஜி – சனம் ஷெட்டி போட்ட எலுமிச்சை மொக்கை எல்லாம் அழகா அன்சீனில் தூக்கிப் போட்டுட்டாங்க!

பராசக்தி வசனம்

பழைய பட டாஸ்க் பண்ண வேண்டும் என்பதை பழைய பட பாணியிலேயே ரியோ ராஜ் அழகா படிச்சார். ஆனால், அவர் படிச்ச அளவுக்கு கூட அந்த டாஸ்க்கை போட்டியாளர்கள் செய்யவில்லை. நிஷா அக்கா வந்து பேசும் போது, பராசக்தியின் வசனம் ஆன, ஓடினேன் ஓடினேன் வசனத்தை தனது வாழ்க்கை நிகழ்வுகளுடன் கலந்து பேசினார்.

அனிதா ஆக்டிங்

5 ரூபாய்க்கு நடிக்க சொன்னா அர்ச்சனா அக்கா 5 லட்சத்துக்கு நடிப்பார். அவருக்கு கொஞ்சமும் தான் குறைந்தவர் இல்லை என அடிக்கடி அனிதா சம்பத்தும் நிரூபித்து வருகிறார். நேற்று, எம்.ஆர். ராதா மாதிரி பேசி நடித்த அனிதா சம்பத், பழைய பட டாஸ்க்கில் நல்லாவே ஸ்கோர் செய்தார்.

கண்ட இடத்துல சொரிய முடியல

தேவை இல்லாம இத்தனை கேமராக்கள் பிக் பாஸ் வீட்டில் எதுக்கு? பாலா, சோம் போன்ற பசங்களை சைட் அடிக்க முடியல, கண்ட இடத்துல அரிச்சதுன்னா டக்குன்னு சொரிய முடியல என வாயில் சிகரெட் போல பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு நல்லாவே நக்கலாக பேசினார்.

அப்பாவி ஆரி

அனிதா சம்பத் பவர்ஹவுஸ் பர்ஃபார்மன்ஸை பண்ணிக் கொண்டு இருக்கும் போது, அவருக்கு சப்போர்ட்டாக நடித்த ஆரி, ஏதோ பாதி தூக்கத்தில் நடிப்பது போல ரொம்பவே சோர்வாக பேசி நடித்தது ரொம்பவே சொதப்பியது. ஆனால், சிங்கிள் ஆளாக அந்த டிராமாவை அனிதா சம்பத் நடித்து பட்டையை கிளப்பினார்.

கமலை தொடர்ந்து

கடந்த வார இறுதியில் கமல்ஹாசனையே ஒருதலை பட்சமாக பேசுகிறார். தன்னையே டார்கெட் பண்ணுகிறார் என பேசிய அனிதா சம்பத், அறிவு இல்லாமல் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துறாங்க, இத்தனை கேமராக்களை கிராமங்களில் வைத்தால், கொள்ளை, கொலை சம்பவங்கள் நடக்காம இருக்கும் என கண்டபடி விளாசித் தள்ளினார்.

பிக் பாஸ்க்கு அறிவே இல்லை

சுகாதாரமா இருக்க வேண்டிய கொரோனா போன்ற காலத்தில், 15 போட்டியாளர்களுக்கு 2 பாத்ரூம் மட்டுமே கொடுத்துட்டு சுத்தமா ஹைஜீனே இல்லாமல் இருக்காங்க, பிக் பாஸ்க்கு சுத்தமா அறிவே இல்லை என எம்.ஆர். ராதா போல நடிப்பதாக, தன் மனதுக்குள் இருந்த அத்தனை குமுறல்களையும் போட்டு உடைத்தார்.

நம்பியாரான ரமேஷ்

கடைசியாக ரியோ ராஜ், கேபி மற்றும் ஜித்தன் ரமேஷின் எம்.ஜி.ஆர் நம்பியார் நாடகம் நடைபெற்றது. ரியோ ராஜ் கேபியை பிடித்து அந்த அழுத்து அழுத்துனதையும், மடியில் போட்டு கொஞ்சியதையும் ஏகப்பட்ட ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு வழியா நம்பியாராக ரமேஷ் நல்லா நடித்தார் என அரிதான காட்சியாக அந்த சீன் பற்றி நெட்டிசன்கள் விவாதித்து வருகின்றனர்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 15 =

*