;
Athirady Tamil News

மகரம் செல்லும் குருவால் எந்த ராசிக்காரருக்கு எம்மாதிரியான பலன் கிடைக்கப்போதுன்னு தெரிஞ்சுக்கணுமா? (வீடியோ, படங்கள்)

0

நவகிரகங்களில் குரு பகவான் முதன்மையான சுப கிரகம் ஆவார். இவர் அனைத்து விதமான செல்வங்களையும் தரக்கூடியவர் என்பதால் குருவிற்கு எப்போதுமே ஒரு தனி சிறப்பு உண்டு. பொதுவாக கிரகங்களின் இடமாற்றம் ஒவ்வொரு ராசியிலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சிறப்புமிக்க குரு பகவான் தனது சொந்த ராசியான தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு வாக்கிய பஞ்சாங்கப்படி நவம்பர் 15 ஆம் தேதி இடம் பெயர்ந்தார். ஆனால் திருக்கணித பஞ்சாங்கப்படி, குரு பகவான் 2020 நவம்பர் 20 ஆம் தேதி மகர ராசிக்கு செல்கிறார்.

பொதுவாக மகர ராசியானது குரு பகவான் நீச்சமடையும் ராசி என்றாலும், அங்கு சனி பகவான் இருப்பதால், நீச்ச பங்க யோகம் கிடைக்கும். ஜோதிடத்தில், குரு இருக்கும் இடத்தை விட, அவர் பார்க்கும் இடம் சிறப்பானதாகவும், பலமடைவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் குரு பார்க்க கோடி நன்மை கிடைக்கும் என்று கூறுகின்றனர். இப்போது 2020 நவம்பர் 20 ஆம் தேதி நிகழவிருக்கும் குருப் பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்கள் எம்மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்கு 9 மற்றும் 12 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான் தொழில், பெயர், புகழ், நிலை மற்றும் அதிகாரத்தைக் குறிக்கும் 10 ஆவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு சாதகமான விளைவுகளைத் தரக்கூடும். பணியிடத்தில் புதிய மற்றும் கூடுதல் பொறுப்புக்கள் கொடுக்கப்படலாம். அலுவலகத்தில் உங்கள் நிலை உயர வாய்ப்புள்ளது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய வேலை வாய்ப்புக்கள் அல்லது பதவி உயர்வு கிடைக்கக்கூடும். கூடுதல் முதலீடுகளுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கலாம். கடந்த முதலீடுகள் நல்ல வருவாயைக் கொண்டு வரக்கூடும். அதிகப்படியான வேலை உங்கள் ஆரோக்கியத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் தாயின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசியின் 8 மற்றும் 11 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான் 9 ஆவது வீட்டில் சஞ்சரிக்கிறார். இது உங்களுக்கு சிறந்த முடிவுகளைத் தரும். இந்த பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான வேலை வாய்ப்புக்களைக் கொண்டு வரும். வெளிநாட்டு வேலைக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பு மற்றும் செயல்திறனுக்கான பதவி உயர்வு உங்களுக்கு கிடைக்கும். இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு ஒட்டுமொத்த அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். தொழில் புரிபவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள். திருப்திகரமான வருமானத்தால் உங்களின் நிதி நிலை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமணமானவர்களுக்கு துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும். திருமணமாகாதவர்கள் புதிய உறவில் நுழைய வாய்ப்புள்ளது.

மிதுனம்

மிதுன ராசியின் 7 மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான், 8 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த பெயர்ச்சி உங்கள் வாழ்க்கையில் சில சீர்குலைக்கும் மாற்றங்களைக் கொண்டு வரக்கூடும். தொழில் வாழ்க்கையில் மெதுவான முன்னேற்றத்தையே காண்பார்கள். இலக்குகளை அடைய கடின முயற்சிகள் தேவைப்படலாம். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு இல்லாதது பணியிடத்தில் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடும். புதிய தொழில் தொடங்குவதற்கு திட்டம் தீட்டியிருந்தால் தள்ளிப் போடுங்கள். பெரிய அளவில் முதலீடு செய்யும் போது விழிப்புடன் இருங்கள். கடந்த கால முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபங்கள் கிடைக்கலாம். அதே சமயம் உயரும் செலவுகள் உங்கள் நிதியில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தும். ஆரோக்கிய பிரச்சனைகள் உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்கலாம். குடும்ப பிரச்சனைகள் உங்கள் கவனத்தையும், செறிவையும் மோசமாக பாதிக்கலாம். திருமணமான தம்பதியினர் தங்கள் துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம்.

கடகம்

கடக ராசியின் 6 மற்றும் 9 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான், 7 ஆவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இது உங்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல நேரத்தைக் கொண்டு வரும். இந்த பெயர்ச்சியால் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் நல்லுறவைப் பேணுவீர்கள். ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. இந்த குரு பெயர்ச்சி காலம் உங்கள் இலக்குகளை எளிதில் அடைய உதவும். வணிக விரிவாக்கம் நன்மை பயக்கும். முதலீடு தொடர்பான முக்கிய முடிவுகள் உங்களுக்கு ஆதரவாக இருக்கலாம். இந்த காலம் நல்ல அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் கொண்டு வரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பம் மற்றும் துணையுடனான உறவுகள் மேம்படும். திருமண பிரச்சனைகள் நீங்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் 5 மற்றும் 8 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான், இந்த பெயர்ச்சியில் 6 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது இந்த ராசிக்காரர்களுக்கு கலவையான முடிவுகளைக் கொடுக்கும். பணியிடத்தில் சராசரி முடிவுகளையே சந்திப்பீர்கள். உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலதிகாரிகளுடன் பேசும் போது கவனமாக இருங்கள். கடின உழைப்பு இருந்த போதிலும் உங்கள் செயல்திறன் பின்னடைவையே சந்திக்கக்கூடும். இருப்பினும், இது உங்கள் நிலைபாட்டைப் பாதிக்காது. தொழில் நோக்கங்களுக்கான கடன்கள் எளிதில் கிடைக்கும். போதுமான பணம் இருந்தாலும் உங்கள் நிதி பிரச்சனையை எதிர்கொள்ளக்கூடும். ஆரோக்கியம் குறித்து சற்று கவனமாக இருக்க வேண்டும். திருமணமானவர்கள் தங்களின் உறவு சிறப்பாக இருக்க சற்று முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். காதலில் விழ இந்த காலம் சாதகமாக இருக்காது.

கன்னி

கன்னி ராசியின் 4 மற்றும் 7 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான், 5 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு சாதகமான நேரமாக இருக்கும். உங்களைச் சுற்றி ஒரு நேர்மறையான ஆற்றல் இருக்கும். புதிய வேலை வாய்ப்புக்களை பெற நினைப்பவர்களுக்கு இந்த பெயர்ச்சியால் கிட்டும். உங்கள் சகாக்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடனான உங்கள் உறவு மேம்படும். வணிகம் தொடர்பான பயணங்கள் சாதகமான முடிவுகளைத் தரக்கூடும். சொத்து, வாகனம் மற்றும் விலை உயர்வான பொருட்களில் முதலீடு செய்வீர்கள். கடந்த கால முதலீடுகள் பயனளிக்கும். ஆரோக்கியம் திருப்திகரமாக இருக்கும். உங்கள் காதல் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு சிறந்த காலம் இது. உங்கள் துணையுடனான உறவு மேம்படும்.

துலாம்

துலாம் ராசியின் 3 மற்றும் 6 ஆவது வீட்டின் அதிபதி தான் குரு பகவான். இவர் இந்த பெயர்ச்சியில் உங்களின் 4 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இதனால் நீங்கள் கலவையான முடிவுகளை எதிர்கொள்ளக்கூடும். உங்கள் தொழில் வாழ்க்கை மெதுவாக இருந்தாலும், நிலையான வளர்ச்சியை எதிர்பார்க்கலாம். உங்கள் தொழில் தொடர்பான முக்கிய முடிவுகளை இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதம் மற்றும் சர்ச்சைகளில் இருந்து விலகி இருங்கள். புதிய வணிக தொடக்கம் தொடர்பான எந்த ஒரு திட்டத்தையும் சில காலம் ஒத்தி வையுங்கள். செலவுகள் சற்று அதிகரிக்கலாம். அதே சமயம் வருமானமும் அதிகரிக்கக்கூடும். சூதாட்டம் ஆடுவதைத் தவிர்க்கவும். சொத்து வாங்குவதற்கான கடன் ஒப்புதல் ஆகலாம். உங்களின் ஆரோக்கியம் படிப்படியாக மேம்படக்கூடும். துலாம் ராசிக்காரர்கள் தங்கள் துணையிடம் இருந்து எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது நல்லது. திருமணமான தம்பதிகள் சண்டைகளையும், வாதங்களையும் தவிர்த்து இருக்கவும். குடும்ப விஷயங்களில் கவனத்தை செலுத்துங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் 2 மற்றும் 5 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான், இந்த பெயர்ச்சியின் போது 3 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இந்த மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சற்று கலவையான முடிவுகளையேத் தரும். வெளிநாட்டு வாய்ப்புக்களை எதிர்பார்ப்பவர்கள் அதிக முயற்சி செய்ய வேண்டியிருக்கும். அலுவலகத்தில் அதிக வேலை பொறுப்புக்களுடன் அதிக பணிச்சுமையும் இருக்கும். உயர் அதிகாரிகளுடன் பேசும் போது கவனமாக இருங்கள். வணிக விரிவாக்கம் தொடர்பான நிதி முடிவுகள் எடுப்பதைத் தவித்திடுங்கள். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளைத் தவிர்த்திடுங்கள். பருவ கால மாற்றங்களால் ஆரோக்கியம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால், அது உங்கள் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் பாதிக்கும். இந்த பெயர்ச்சி உங்கள் துணைக்கும், உங்களுக்கும் இடையே உணர்ச்சி மற்றும் உடல் ரீதியான தூரத்தைக் கொண்டு வரக்கூடும்.

தனுசு

தனுசு ராசியின் முதல் மற்றும் 4 ஆவது வீட்டின் அதிபதி தான் குரு பகவான். இவர் இந்த பெயர்ச்சியின் போது 2 ஆவது வீட்டிற்கு செல்வதால், உங்களுக்கு சாதகமான விளைவுகளைத் தரக்கூடும். அதிகளவு நம்பிக்கையும், உற்சாகமும் உங்களின் ஒட்டுமொத்த உற்பத்தித் திறனையும் நேர்மறையாக பாதிக்கலாம். பணியிடத்தில் மரியாதை, பாராட்டு மற்றும் அங்கீகாரத்தைப் பெறலாம். பணியிடத்தில் உங்கள் எதிரிகளை வெல்ல உங்களின் ராஜதந்திரம் உதவக்கூடும். உங்கள் புதுமையான யோசனைகள் மற்றும் நுட்பங்கள் உங்கள் வணிகத்தை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லக்கூடும். வணிகம் தொடர்பான பயணங்கள் லாபகரமானதாக மாறக்கூடும். கடந்த கால முதலீடுகள் மகத்தான நிதி வெகுமதிகளைக் கொண்டு வரக்கூடும். ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏதும் இருக்காது. வீட்டு பிரச்சனைகள் சுமூகமாக தீர்க்கப்படும். திருமணமான தம்பதிகள் தங்கள் திருமண வாழ்க்கையில் நேர்மறையான நல்லிணக்கத்தை அனுபவிக்கலாம். காதல் வாழ்க்கை செழிக்கக்கூடும் என்பதால் உறவுக்குள் நுழைய இது சிறந்த நேரமாக இருக்கும்.

மகரம்

மகர ராசியின் 12 மற்றும் 3 ஆவது வீட்டின் அதிபதியான குருபகவான், முதல் வீட்டிற்கு செல்கிறார். இது உங்களுக்கு ஓரளவு தான் நல்ல பலனைக் கொடுக்கும். அலுவலகத்தில் கடினமாக உழைத்த போதிலும், உங்கள் செயல்திறனை உயர் அதிகாரிகள் புறக்கணிக்கலாம். இருப்பினும், குருவின் நிலை உங்கள் வேலைக்கு நேர்மறையைக் கொண்டு வரக்கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள், தங்கள் கூட்டாளருடன் மோதல்களில் ஈடுபடுவதற்கான வலுவான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரத்தில் முன்னேற்றம் மெதுவாக இருப்பது உங்களுக்கு கவலையை அளிக்கலாம். செலவுகளை திட்டமிட்டு செய்யுங்கள். நீண்ட கால முதலீடுகள் நன்மை பயக்கும். உங்களின் நிதி நிலை படிப்படியாக மேம்படக்கூடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறு பிரச்சனைகளை சந்திக்கலாம். இருப்பினும் கவனமாக இருந்தால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நண்பர்களிடம் இருந்து நீங்கள் ஆதரவை எதிர்பார்ப்பீர்கள். உங்கள் அன்பானவருடன் நேரத்தை செலவிடுவதற்கு முன்னுரிமை அளிப்பீர்கள். குழந்தை பாக்கியத்திற்கு ஏங்கும் தம்பதிகள், அந்த பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்

கும்ப ராசியின் 11 மற்றும் 2 ஆவது வீட்டின் அதிபதி குரு பகவான். இவர் இந்த ராசியின் 12 ஆவது வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார். இதனால் இந்த பெயர்ச்சி காலம் கலவையான முடிவுகளைத் தருவதாக இருக்கும். அலுவலகத்தில் இட மாற்றத்திற்கான வாய்ப்புள்ளது. சிறந்த எதிர்கால வாய்ப்புகளுக்கான உங்கள் சிந்தனை முறைகளை மாற்ற வேண்டியிருக்கலாம். வணிக கூட்டாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான உறவில் கவனமாக இருங்கள். எதிர்பாராத செலவுகள் உங்கள் நிதி திட்டத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். பணப் பற்றாக்குறை உங்களை கடன் வாங்க கட்டாயப்படுத்தக்கூடும். சொத்து அல்லது வாகனம் வாங்குவதற்கான கடந்தகால முயற்சிகள் தற்போது பலனளிக்கும். ஆரோக்கியம் மிதமாக இருக்கும். குடும்ப அமைதியில் இடையூறு ஏற்படக்கூடும். தம்பதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகளால் உறவில் இடைவெளியானது விரிவடையக்கூடும்.

மீனம்

மீன ராசியின் முதல் மற்றும் 10 ஆவது வீட்டின் அதிபதியான குரு பகவான், இந்த பெயர்ச்சியின் போது 11 ஆவது வீட்டிற்கு செல்கிறார். இது இவர்களுக்கு மகத்தான காலமாக இருக்கப் போகிறது. தொழில் வாழ்க்கையில், அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சியுடன் வேலை செய்வது வெற்றிப் பாதைக்கு வழிவகுக்கும். உங்கள் வழக்கமான பணிகளில் நம்பிக்கையும், நேர்மறையும் பிரதிபலிக்கக்கூடும். அலுவலகத்தில் பதவி உயர்வு மற்றும் உயர் சம்பளத்திற்கான வாய்ப்புக்களைப் பெற வாய்ப்புள்ளது. உங்கள் வணிக கூட்டாளர்கள் உங்கள் முன்னேற்றத்திற்கு உதவக்கூடும். வணிக ஒப்பந்தங்கள் லாபகரமாக இருக்கும். ஆடம்பர விஷயங்களுக்கான செலவுகள் அதிகரிப்பதைக் காண்பீர்கள். இருப்பினும் உங்கள் வருமானத்திலும் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. மொத்தத்தில், உங்கள் நிலையான மற்றும் பாதுகாப்பான நிதி நிலையைக் கொண்டிருப்பீர்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரிப்பீர்கள். கடந்த கால ஆரோக்கிய பிரச்சனைகள் மறையும். காதல் மற்றும் நெருக்கம் உங்கள் உறவுகளில் இனிமையைக் கொண்டு வரும். நண்பர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.



You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − five =

*