மாவீரர் தினத்திற்கு எதிரான தடைஉத்தரவை பெற்றுள்ளோம்- பொலிஸ் பேச்சாளர்!!

விடுதலைப்புலிகளின் மாவீரர் தினத்திற்கு எதிரான தடையுத்தரவை பொலிஸார் பெற்றுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் தினத்தினை தடை செய்யும் உத்தரவினை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன என அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.
மன்னாரில் ஐந்துபேருக்கு எதிராகவும் வவுனியாவில் எட்டுபேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தினத்திற்கான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்தே இந்த உத்தரவினை பெற்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தடைஉத்தரவை மீறுபவர்களிற்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள் இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் சிங்கள மக்களிற்கு எதிரான பிரிவினையை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.