;
Athirady Tamil News

ஷிவானிக்கு கெட் அவுட்டு.. சனம்க்கு கட் அவுட்டு.. பழைய படம் சீன்லையும் உன்னை சேர்க்கலையே ஆத்தா! (வீடியோ, படங்கள்)

0

சென்னை: இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.

தீபாவளி வாரத்தில் இறங்கிய சுவாரஸ்யங்களை இந்த வாரம் ஆரம்பத்தில் இருந்தே சட்டென பல்ஸை மாற்றி, பாலாவுக்கும் ஷிவானிக்கும் முட்டிக்க விட்டு எகிற வைத்து விட்டனர். மூன்றாவது புரமோவில் வரும் பழைய பட டாஸ்க்கிலும் பாலாஜிக்கு ஷிவானி ஜோடி இல்லை.

சட்டென்று மாறுது வானிலை

தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிக் பாஸ் வீட்டிலும் வானிலை சட்டென மாறி, புயலும் மழையும் வெளுத்து வாங்குது. பாலாவின் பணிப்பெண்ணாக இருந்த ஷிவானி, தான் என்னவோ மகாராணி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிக் கொண்டு இருந்தார். டிஸ்டர்ப் பண்ணாத போ, என ஷிவானியை கழட்டி விட்ட பாலாவை ரொம்பவே மிஸ் பண்றாரு..

சூனியம் வைத்த சுச்சி

பாலாவையும் ஷிவானியையும் பிரித்து, இரண்டு பேரில் ஒருவரை சீக்கிரம் வீட்டுக்கு பெட்டி படுக்கையை எடுத்து வைத்து ஏறக்கட்ட சுச்சி போட்ட சூனியம் நல்லாவே வேலை செய்து வருகிறது. எங்க கொளுத்திப் போட்டா ஷிவானிக்கு பத்திக்குமோ, ஷிவானி என்ன சொன்னா பாலா கொதிப்பான்னு நல்லாவே தெரிஞ்சு சிடுமூஞ்சி மேக்ஸ் கேம் ஆடி வருகிறது.

முதல் புரமோ

பிக் பாஸ் வீட்டில் 48 மணி நேர மணிக் கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டு, போட்டியாளர்களை கொஞ்சம் பிசிக்கலா பெண்டு நிமிர்த்தலாம் என பிக் பாஸ் முடிவு செஞ்சிட்டார் போல, போன வாரம் எல்லாம் தீபாவளி விருந்து சாப்பிட்டு சாப்பிட்டு, சோம்பேறியா இருக்கிறவங்கள சுறு சுறுப்பாக மாற்றும் முயற்சியா? என நெட்டிசன்கள் நக்கலடித்து வருகின்றனர்.

அர்ச்சனாவை அசிங்கமா திட்டிய நிஷா

முதல் டாஸ்க்கின் தொடர்ச்சியாக குழாயடி சண்டை முடியை பிடித்துக் கொண்டு போடும் அளவுக்கு அர்ச்சனாவுக்கும், நிஷாவுக்கும் அரங்கேறியதை பார்த்த ரசிகர்கள், வெல்கம் டு பிக் பாஸ் சீசன் 4 என ரியோ ஸ்டைலில் சொல்ல ஆரம்பித்து விட்டனர். நிஷா உள்ள இருக்கிற காண்டை எல்லாம் வைத்து அர்ச்சனாவை அசிங்கமா திட்றதெல்லாம் வேற லெவல்.

பழைய பட டாஸ்க்

முதல் இரு புரமோக்கள் பட்டாசாய் வெடித்த நிலையில், அன்சீனில் போட வேண்டிய புரமோவை வழக்கம் போல எடிட்டர் 3வது புரமோவாக போட்டு விட்டார். பழைய படங்களில் வரும் வசனங்களை பிக் பாஸ் போட்டியாளர்கள் பேசி நடிக்க வேண்டும், எல்லாரும் ரொம்பவே டார்ச்சர் பண்றாங்க..

உண்டியல் சத்தம்

ரியோ ராஜ் பிடித்து அழுத்துன அழுத்துக்கு கேபி புள்ள கையில் இந்நேரம் உண்டியல் சத்தமே கேட்டு இருக்கும். அந்த புடி புடிச்சிட்டார் மனுஷன். நிஷா அக்கா சும்மாவே தமிழ் வசனங்களை சூப்பரா பேசுவாங்க, இந்த டாஸ்க்கில் ஃபன் வர வைக்க தப்பு தப்பா பேச ட்ரை பண்றாங்க போல, சகிக்கல, சனம் ஷெட்டி நிலைமை தான் ரொம்பவே பாவம்.

ஷிவானிக்கு கெட் அவுட்டு பாலா எப்பவுமே பெர்ஃபார்ம் பண்ணனும்னா, ஷிவானி கூட சேர்ந்து தான் பண்ணுவாப்பல, இந்த டாஸ்க்கில், ஷிவானியை கழட்டி விட்டுப்புட்டு, சனம் ஷெட்டி கூட ஜோடி போட்டு நடிக்கிறார். ஆரிக்கும் சனம் ஷெட்டி தான் ஜோடி, பாலாவுக்கும் சனம் தான் ஜோடி. நல்ல வேளை சுச்சியை ஜோடியா போட்டு நடிச்சிருந்தா ஷிவானி காலி என ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + eleven =

*