;
Athirady Tamil News

கிரைம் ரேட் கூடிட்டே போகுதே.. சுச்சியை அப்படியே அலேக்கா தூக்கிட்டுப் போன பாலா.. நொறுங்கலன்னா சரி! (வீடியோ, படங்கள்)

0

சனம் ஷெட்டி பின்னாடி பாட்டிலை கொண்டு எறிவதும், சுச்சியை அலேக்கா தூக்கிக் கொண்டு செல்வதும், ஷிவானியுடன் வம்பிழுத்து டான்ஸ் ஆடுவதுமென பாலாவின் அலம்பல் தாங்க முடியலை. பிக் பாஸ் வீட்டில் சிவனேன்னு இருக்கக் கூடாது. ஏகப்பட்ட சில்மிஷங்கள் பண்ணாத்தான் நம்மை டிவியில் காட்டுவாங்க என்பதை நல்லாவே புரிந்து வைத்துள்ளார் பாலா.

ஆனாலும், ஒரு கட்டத்திற்கு மேல, இது அவருக்கே நெகட்டிவ் பப்ளிசிட்டியாகவும், பிரச்சனைகளையும் கிளப்பி விடுவதை புரிந்து கொள்ள மறுக்கிறார்.

வால் சேட்டை

பிக் பாஸ் வீட்டில் வால் சேட்டை பண்ணும் நபராக பாலாஜி முருகதாஸ் இருந்து வருகிறார். மற்ற போட்டியாளர்களை மட்டம் தட்டுவது. நட்பு பாராட்டுவது என்கிற பெயரில் அராஜகம் செய்வது. கேட்டால் அதுதான் தனது இயல்பு என ஆட்டிட்யூட் காட்டுவது என திமிர் பிடித்த குழந்தையாக பாலா பண்ணும் சேட்டைகள் எரிச்சலையே ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறது.

சூடான சுள்ளான்

பாலாஜி முருகதாஸ் கிட்ட இருக்க கெட்ட பழக்கம் என்னவென்றால், அவர் யாரை வேண்டுமானாலும் டீஸ் பண்ணலாம். விளையாடுகிறேன் என்கிற பெயரில் அவங்களை கடுப்பேத்தலாம் எல்லை மீறி என்ன வேணா செய்யலாம். ஆனால், தன்னை பற்றி யாராவது ஏதாவது சொன்னால், உடனே டென்ஷன் மண்டைக்கு ஏறி, நான் சூடானேன் சுள்ளான் சுளுக்கெடுத்துடுவேன் என்கிற ரேஞ்சுக்கு கத்த ஆரம்பித்து விடுவார்.

சுச்சி கொடுத்த முத்தம்

பாடகி சுசித்ரா பிக் பாஸ் வீட்டுக்கு வந்ததில் இருந்தே பாலாஜி முருகதாஸ் மீது ஒரு கண்ணாகவே இருக்கிறார். பாலாஜியுடன் ஒட்டி உரசி உட்கார்ந்து கொண்டும், பக்கத்தில் பக்கத்தில் படுக்கை அறையில் படுத்துக் கொண்டும் இருந்த சுசித்ரா, சமீபத்தில், கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து, வேற லெவல் ரகளை செய்தது ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது.

பையன் மாதிரி

சுசித்ராவுக்கு 38 வயசாகுது, பார்க்க இப்பவே பாதி கிழவி ஆன மாதிரி தான் இருக்காங்க.. அதே 38 வயதான அர்ச்சனா, 24 வயது பாலாஜி முருகதாஸை தனது மகன் என நினைக்கும் இடத்தில், சுசித்ரா வரம்பு மீறி செயல்படுவது எல்லோரையும் ரொம்பவே கடுப்பாகி வருகிறது. பாலா, சுச்சியை வெறுக்கிறாரா? இல்லை விரும்புகிறாரா? என்பதும் புரியாத புதிராகவே உள்ளது தான் சிறப்பான சம்பவமே!

அலேக்கா தூக்கிக்கிட்டு

படுத்த பாயை சுருட்டிக் கொண்டு போவது போல, பிக் பாஸ் வீட்டின் 44வது நாள் நிகழ்ச்சியில், திடீரென சுசித்ராவை அலேக்கா தூக்கிக்கிட்டு பாலா சென்றது அனைவரையும் அதிர வைத்தது. எந்த காரணத்திற்காக அவர் அப்படி செய்தார் என்றும், தூக்கிட்டு போறீங்களே பார்த்து போட்டு நொறுக்கிடாதீங்க என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

பாலாவின் பப்பட்

பாலாஜி முருகதாஸின் பப்பட்டாகவே ஷிவானி நாராயணன் மாறி விட்டார் போல தெரிகிறது. சுசித்ராவை தூக்கிட்டு போறார். சனம் ஷெட்டியின் பின்னாடி பாட்டிலை கொண்டு எறிகிறார். ஷிவானி கூட டான்ஸ் ஆடுறார். தலையணை வைத்து தனியாக பிரிந்து உட்கார்ந்தது போல சீன் போடுறாங்க, அப்புறம் பெட்ல ஒண்ணா உட்கார்ந்து பேசுறாங்க, இவங்க லூசா இல்லை ரசிகர்களை லூசாக்கும் முயற்சியா? என்றே தெரியவில்லை.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − 19 =

*