;
Athirady Tamil News

’ஸ்மைலி’ பதாகையுடன் போராட்டம் நடத்திய நபருக்கு ரூ. 2 லட்சத்து 75 ஆயிரம் அபராதம்..!!

0

சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த சமூக செயல்பாட்டாளர் ஜோலவன் வுஹம் (40). இயற்கை நல ஆர்வளரான வுஹம் கடந்த சில ஆண்டுகளாக பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதற்கிடையில், கடந்த மார்ச் மாதம் 28-ம் தேதி இரண்டு பருவநிலைமாற்ற செயல்பாட்டாளர்கள் சிங்கப்பூர் நகரில் பருவநிலைமாற்றம் குறித்து பதாகைகளை ஏந்தி உரிய அனுமதியின்றி போராட்டம் நடத்தினர்.

அந்த பதாகையில், ’எண்ணெய்யை விட சிங்கப்பூர் சிறந்தது’ என எழுதி பருவநிலை மாற்றம் தொடர்பாக தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட செயல்பாட்டாளர்களை விடுதலை செய்யக்கோரி அவர்களை கைது செய்யப்பட்ட போலீஸ் நிலையம் முன்பு ஜோலவன் வுஹம் போராட்டம் நடத்தினார்.

அனுமதியின்றி நடைபெற்ற அந்த போராட்டத்தில் ஜோலவன் வுஹம் தனது கையில் ‘ஸ்மைலி’ பதாகையுடன் போலீஸ் நிலையம் சில நிமிடங்கள் நின்றுகொண்டிருந்தார்.

இதையடுத்து, அனுமதியின்றி தனிநபராக போராட்டம் நடத்தியதாக ஜோலவன் வுஹம் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பொது சட்டத்திப்பிரிவு 257 ஏ-வின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கூடிய விரையில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். 5 ஆயிரம் சிங்கப்பூர் டாலரின் இந்திய மதிப்பு சுமார் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோலவன் வுஹம் மீது சிங்கப்பூர் போலீஸ் பதிவு செய்துள்ள வழக்குகளுக்கு அம்னெஸ்டி உள்பட பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 3 =

*