;
Athirady Tamil News

இதுக்கு மேல யாரும் மிக்சர் தின்னக் கூடாது.. தள்ளுங்கடா ரயிலை.. பெண்டு நிமிர்த்த தொடங்கிய பிக் பாஸ்! (வீடியோ, படங்கள்)

0

பிக் பாஸ் நிகழ்ச்சி இந்த வாரம் நல்லாவே சூடு பிடிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆரம்பத்தில், சுரேஷ் சக்கரவர்த்தி, அர்ச்சனா, ரம்யா, அனிதா, ரியோ, பாலா, சனம் உள்ளிட்ட வெகு சிலரே பர்ஃபார்ம் பண்ணி வந்த நிலையில் இப்போ எல்லோரையும் பெண்டு நிமிர்த்தி வருகிறார் பிக் பாஸ்.

மணிக்கூண்டு டாஸ்க் கொடுத்து, அடுத்த லெவல் சண்டையை மூட்ட நாரதர் தனது கலகத்தை தொடங்கி இருக்கிறார்.

மணிக்கூண்டாக மாறி பிக்பாஸ்

போட்டியாளர்கள் ஒவ்வொரு டீமாக பிரிந்து, குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு, நொடி முள்ளாகவும், நிமிட முள்ளாகவும் இருந்து, நேரத்தை கணக்கிட வேண்டும் என்றும், அந்த நேரத்திற்குள், ஹவுஸ்மேட்ஸ் க்ளீனிங், சமையல், ஹவுஸ் கீப்பிங் உள்ளிட்ட வேலைகளை செய்யவும் பணிக்கப்பட்டுள்ளனர்.

ரயிலை தள்ளணும்

ஒரு டாஸ்க்கின் நேரம் முடியும் போது, ஹவுஸ்மேட்கள் அனைவரும் சேர்ந்து, பிக் பாஸ் ஸ்டேஷனில் வைக்கப்பட்டுள்ள ரயில் என்ஜினை வேற கூ சிக்கு புக்குவென சொல்லிக் கொண்டு தள்ளும் அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். பிக் பாஸ் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சியில் பார்த்த பல முகங்கள், இப்போ தான் வெளியே வந்து டாஸ்க் பண்றாங்க என பலரும் கலாய்த்து வருகின்றனர்.

பெண்டெடுக்கும் பிக்பாஸ்

ஓசியில பிரியாணி, ஸ்வீட், கேக்குன்னு சாப்பிட்டு உடம்பை வளர்த்துக் கொண்டு, திரியும் பிக் பாஸ் போட்டியாளர்களை இப்போ தான் கொஞ்சம் கொஞ்சமாக பிசிக்கல் டாஸ்க் கொடுத்து பெண்டெடுக்க பிக் பாஸ் ஆரம்பித்துள்ளார் என்றும், இன்னமும் கடுமையான போட்டிகளை கொடுத்து அவர்களை ஓட விடுங்கள் என்றும் பிக்பாஸ் ரசிகர்கள் கோரிக்கை மனுக்களை அனுப்பிக் கொண்டே இருக்கின்றனர்.

தக்க தைய தையா

கூ சிக்கு புக்கு பாடல் போரடித்து விட்டது என தெரிந்ததும், ஷாருக்கானின் உயிரே படத்தில் வரும் தக்க தைய தையா பாடலை பாடிக் கொண்டு பிக் பாஸ் போட்டியாளர்கள் அந்த அட்டை பெட்டி ரயிலை தள்ளிக் கொண்டு போனது செம சூப்பர். விவேக் காமெடியில் வருவதை போல, இதைத்தான் ராத்திரி பூரா ஒட்டிக் கிட்டு இருந்தியா என்றே கேட்கத் தோன்றுகிறது.










“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*