;
Athirady Tamil News

எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

0

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகமுமான எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகர சபைக்கு அருகாமையில் உள்ள தனது அலுவலகத்திலிருந்து நேற்று இரவு வீடு செல்வதற்காக அலுவலகத்தின் கதவை மூடிய போது அதிலிருந்த பாம்பு ஒன்று கையில் தீண்டியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறையிலுள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (20) இரவு பாம்புக்கடிக்கு இலக்கானார். இரவு 9.20 மணியளவில் அலுவலகத்தின் மலசலகூட கதவிலிருந்த புடையன் பாம்பு சிவாஜிலிங்கத்தின் கையில் தீண்டியது.

இதையடுத்து வல்வெட்டித்துறை ஊரணி வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பாம்பு உயிருடன் பிடிக்கப்பட்டு போத்தலில் அடைக்கப்பட்டு, வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பாம்புக்கடிக்கு இலக்கான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை தேறி வருகிறது. இதையடுத்து, அதிதீவிரை சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண விடுதிக்கு இன்று காலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.

எனினும், அவர் தொடர்ந்து சோர்வாக காணப்படுகிறார்.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் மக்கள் கூடுகையை தடுப்பதற்கான வீதி தடைகள்!! (வீடியோ, படங்கள்)

தீவகத்தில் இன்று தொடக்கம் எதிர்வரும் 27ஆம் திகதிவரை ஒன்றுகூடி நிகழ்வுகளை நடத்த நீதிமன்றம் தடை!!

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + 6 =

*