;
Athirady Tamil News

கோரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

வவுனியாவில் கோரோனா தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் இன்று (21) வழங்கி வைக்கப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்றை தடுப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்ட வறுமைக் கோட்டிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு ‘வீ,வோக்,வெல்’ என்ற நிறுவனத்தினூடாக புலம் பெயர்ந்தவர்களின் நிதியினூடாக இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது.

வவுனியா பத்தினியார் மகிழங்குளம், பாலமோட்டை மற்றும் மகாரம்பைக்குளம் ஆகிய கிராமங்களில் கிராம உத்தியோகத்தர்களால் தெரிவு செய்யப்பட்ட 65 குடும்பங்களுக்கு ‘வீ.வோக்.வெல்’ நிறுவனத்தின் வடக்கு கிழக்கு பணிப்பாளர்; எஸ்.நாகராஜா தலைமையில் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த ‘வீ.வோக் வெல்’ நிறுவனத்தின் பணிப்பாளர் நகராஜா,
வவுனியாவில் எமது நிறுவனமானது முதற்கட்ட நிவாரணப்பணியினை ஆரம்பித்துள்ளது. இது வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு விஸ்தரிக்கப்பட்டு முழுமையான நிவாரணப்பணிகள் முன்னெடுக்கப்படும். நிவாரணப்பணிகள் மாத்திரமல்ல, வாழ்வாதாரம், கல்வி போன்ற பணிகளும் எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்வில் வவுனியா சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு அதிகாரி ஜெ.ஜெயக்கென்னடி, சமூக சேவையாளர் அரசரெட்ணம் சூரியகுமாரன் ஆகியோர் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × four =

*