;
Athirady Tamil News

உலக சுகாதார ஸ்தாபனம் அங்கீகாரம் வழங்காத சீன மருந்தினை இலங்கைக்கு கொண்டுவர முயற்சி- எதிர்கட்சி!!

0

சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என எதிர்கட்சி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திசநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை தடுக்கும் குணப்படுத்தும் என இன்னமும் உறுதிசெய்யப்படாத சீன மருந்தொன்றினை கொண்டுவருவதற்கு இலங்கை அரசாங்கம் முயல்கின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சிரேஸ்ட அரச அதிகாரிகளுடன் தொடர்புடைய வர்த்தகர்கள் சிலர் இந்த மருந்தினை இலங்கையில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட சீன மருந்தினை உலக சுகாதார ஸ்தாபனம் இன்னமும் அங்கீகரிக்கவில்லை என தெரிவித்துள்ள அவர் இந்த மருந்தினை பயன்படுத்தி வர்த்தகர்கள் பெரும் பணத்தை உழைப்பார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உலகசுகாதாரம் அமெரிக்கா ஐரோப்பியநாடுகளில் தயாரிக்கப்பட்ட மருந்;துகளை ஏற்றுக்கொண்டுள்ளது சீன ரஸ்ய மருந்துகளை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக பொதுமக்களை எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*