;
Athirady Tamil News

எம்.கே.சிவாஜிலிங்கத்தை நலம் விசாரித்த “புளொட்” சித்தார்த்தன், & கஜதீபன்!

0

பாம்புக் கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை “புளொட்” தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் மற்றும் புளொட் யாழ். மாவடட அமைப்பாளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான பா.கஜதீபன் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.

நேற்று இரவு பாம்புக்கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் வைத்தியசாலைக்குச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் உள்ளிட்டவர்கள் சிவாஜிலிங்கத்தை சந்தித்து நலம் விசாரித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

எம்.கே.சிவாஜிலிங்கம் பாம்பு தீண்டிய நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 − 5 =

*