;
Athirady Tamil News

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு!! (வீடியோ, படங்கள்)

0

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசங்களின் சம்மேளனத்தின் ஊடக சந்திப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள சம்மேளன மண்டபத்தில் இன்றையதினம் இடம்பெற்றது.

23 வது உலக மீனவர் தின நிகழ்வு தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினரின் ஏற்பாட்டில் உரும்பிராயில் இடம்பெற்றது. “நிலப் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் மக்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக பலமான சமூக இயக்கத்தை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் யாழ் மாவட்டத்தில் சிறப்பாக சமூக சேவை புரியும் இருவர் தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினால் இன்றைய உலக மீனவர் தினத்தில் கௌரவிக்கப்பட்டார்கள்.

நிகழ்வில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராஜா நிரோஷ் , யாழ் மாவட்ட மீனவர் சங்கப் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளடங்கலாக தற்போதைய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அமைதியான முறையில் மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் உலக மீனவர் தின நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen − 3 =

*