;
Athirady Tamil News

மழையால் பாதிக்கப்பட்ட ஓலை வீட்டுக்கு, மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் தறப்பாள் வழங்கல்.. (படங்கள் & வீடியோ)

0

மழையால் பாதிக்கப்பட்ட ஓலை வீட்டுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தால் தறப்பாள் வழங்கி வைக்கப்பட்டது.
############################################

வவுனியா பிரதேச பம்பைமடு கிராமசேவையாளர் பிரிவில் மூன்றாம் ஒழுங்கை பாடசாலை வீதியில் வசிக்கும் ஒரு பிள்ளையைக் கொண்ட குடும்பத்திற்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் மூலமாக தறப்பாள் வழங்கப்பட்டது.

ஒரு குழந்தையை கொண்ட இளங்குடும்பம் சமீபத்தில் பெய்த மழையினால் வீடு பெரிதாக பாதிக்கப்பட்டு வாழ்வதற்கு இயலாத சூழலில், கொரோனா தொற்று நோயின் தாக்கமும், அதனால் வேலைக்குப் போக முடியாத நிலையில் மிகவும் வறுமையினால் அல்லல்பட்ட நிலையை, சமுக ஆர்வலர் செல்லத்துரை சபாநாதன் நேரில் சென்று அவதானித்து மாணிக்கதாசன் நற்பணி மன்றத்திடம் உதவி கேட்டிருந்தார்.

குறிப்பிட்ட குடும்பத்தின் நிலையையும் மழை காரணமாக ஒழுகும் நிலையிலுள்ள வீட்டின் நிலையையும் கருத்திற் கொண்டு குறிப்பாக சிறு குழந்தையின் வாழ்வியல் சூழலை கருத்திற் கொண்டு புலம்பெயர் புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில் இன்று அவர்களது இல்லத்தில் வைத்து தறப்பாள் வழங்கப்பட்டது.

தாயகமெங்கும் யுத்தம் இடப்பெயர்வு, வேலையின்மை, கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் நிலையறிந்து, தேவையுணர்ந்து மாணிக்கதாசன் நற்பணி மன்றம் பலதடவை உதவி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

தறப்பாளை பெற்றுக் கொண்ட பின்னர் கருத்து தெரிந்த குடும்பத்தர் “இதுநாள்வரை இந்த ஓட்டை வீட்டுக்குள் தான் வாழ்ந்தோம், மழை பெய்தபின் வீடு ஒழுக தொடங்கி விட்டது. எங்கள் குழந்தையோடு மிகவும் துன்பப்பட்டோம் பல நிறுவனத்திடம் தறப்பாள் கேட்டபோதும் தருகிறேன் என்றார்களே தவிர இதுவரை கிடைக்கவில்லை, மாணிக்கதாசன் நற்பணி மன்றமே எங்களுக்கு அந்த பேருதவியை செய்து தந்துள்ளார்கள் அவர்களுக்கு எனது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்” என்றார்

தகவல் & படங்கள்… -தலைமையகம், “மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” வவுனியா.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two + nineteen =

*