;
Athirady Tamil News

ஃபேக்கா லவ் பண்றாங்க.. பாலாஜியையும் ஷிவானியையும் கழுவி ஊற்றிய ரம்யா பாண்டியன்.. மரண பங்கம்! (வீடியோ, படங்கள்)

0

பிக்பாஸ் வீட்டில் பாலாஜியும் ஷிவானியும் போலியாய் காதலிப்பதாய் கழுவி ஊற்றியுள்ளார் ரம்யா பாண்டியன். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள பாலாஜியும் ஷிவானியும் பிரிவதே இல்லை.

ஷிவானியின் மடியில் பாலாஜி படுப்பதும், அவருக்கு ஷிவானி மசாஜ் செய்வதும் ஊட்டிவிடுவதும் என இருந்து வருகின்றனர்.

டைம் பாஸாக..

எந்நேரமும் பாலாஜியுடன் ஒட்டி உரசியப்படியே இருக்கும் ஷிவானி மற்ற ஹவுஸ் மெட்ஸ்களை கண்டுகொள்வதே இல்லை. ஷிவானி பாலாஜி மீது உண்மையிலேயே காதல் கொண்டிருந்தாலும், பாலாஜி அவரை டைம் பாஸாகதான் பயன்படுத்தி வருகிறார்.

கட்டிபிடித்து முத்தம்

ஷிவானி மட்டுமின்றி, சம்யுக்தா, சுச்சி, சனம் ஷெட்டி, அனிதா என அனைவருடனும் கடலை போட்டு வருகிறார். குறிப்பாக சம்யுக்தாவுடனும் சுச்சியுடனும் வேற லெவலில் உள்ளார் பாலாஜி. சுச்சியும் பாலாஜியும் கட்டிப்பிடிப்பது முத்தம் கொடுப்பது என வேற மாதிரி சென்று கொண்டிருக்கின்றனர்.

கோபித்து கொள்ளும் ஷிவானி

இருந்தபோதும் ஷிவானி பாலாஜியை விடுவதில்லை. பாலாஜியே விலகினாலும் ஷிவானி வாண்ட்டடாக அவரிடம் சென்று வழிகிறார். தன்னுடன் நேரத்தை கழிக்காவிட்டால் கோபித்து கொள்கிறார் ஷிவானி.

கிழித்துவிட்ட ரம்யா

சமூக வலைதளங்களில் அவர்களின் காதல் உண்மையானதாக தெரியவில்லை என்று ஏற்கனவே ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பாலாஜி மற்றும் ஷிவானியின் காதல் போலியான காதல் என கிழித்து தொங்கவிட்டார் ரம்யா பாண்டியன்.

ஆஜித்திடம் கேட்ட ரம்யா

அதாவது, ரம்யா பாண்டியன், சம்யுக்தா மற்றும் ஆஜித் ஆகியோர் பெட்ரூமில் அமர்ந்து பேசினர். அப்போது போரிங் பர்ஃபாமன்ஸ் குறித்து அவர்கள் மூன்று பேரும் பேசுகிறார்கள். ஆஜித்திடம் உன் மனசுல தோன்றுவது யார்? என்று கேட்டார் ரம்யா பாண்டியன்.

ரம்யா செம கலாய்

அதற்கு எனக்கு சுச்சி மற்றும் ஷிவானிதான் தோன்றுகிறது என்று ஆஜித் கூற உடனே சம்யுக்தா ஷிவானி என்ன பண்ணா என்று கேட்க, அவர் எதுவும் பண்ணல என்பதற்காகதான் சொல்கிறார் என செம கலாய் கொடுத்து சிரித்தார் ரம்யா பாண்டியன்.

பாலா மாமா கூடதான்..

தொடர்ந்து பேசிய ரம்யா பாண்டியன், ஷிவானி, பாலாவை என்டெர்டெய்ன் பண்ணும் ஒரே வேலையைதான் ஃபுல்டைம்மா பண்ணிட்டுருக்கா. என்ன கேட்டா பாலா மாமா பாலா மாமான்னு நீங்க சுத்துறீங்க.. வீட்ல இந்த இன்வால்மென்டையும் சுவாரசியத்தையும் காட்டினீங்கன்னு சொன்னிங்கன்னா உடனே ஜஸ்டிஃபிகேஷனுக்கு வந்துருவாங்க என்றும் மரண பங்கம் செய்தார்.

ஷிவானியை இமிடேட் செய்து

மேலும் ஷிவானி பேசுவதை போன்றே ஏன் அப்படி சொல்றீங்க எனக்கு தெரியும் என கைகளை கட்டி தலையை குனிந்து ஷிவானி பேசுவதை போன்றி பேசி காட்டி வேற லெவலில் செய்தார். குக்கு டாஸ்க்கின் போதுக்கூட அவர் அடிக்கடி இங்கு வந்தது அவரை பார்க்கதான்.

போலியான காதல்

என்னிடம் வந்தபோது, இங்கே ஏன் வர்றீங்க, எப்டியும் அங்க தானே போகப் போறீங்க அதுக்கு நேரா அங்கேயே சொல்லிட்டு போங்க என்று சொன்னேன். சுவாரசியமா இருந்தாலும் பார்த்து ரசிக்கலாம். கலாய்க்கலாம்.. ஃபேக்கா இருக்கு.. உண்மையா அவங்க பண்ணல.

அண்ணன் கூட விளையாடுறா

வாண்ட்டடா பண்ற மாதிரி இருக்கு.. பார்க்கவே வெறுப்பா இருக்கு என்று மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்தார் ரம்யா பாண்டியன். அந்த நேரம் பார்த்து பாலாவும் ஷிவானியும் ஓடி பிடித்து விளையாட, ஷிவானி அவ அண்ணன்கூட விளையாடுறா என்று மீண்டும் மரண கலாய் கலாய்த்தார்.

கொட்டித்தீர்த்த ரம்யா

அதனைக்கேட்ட ஆஜித், சம்யுக்தா மட்டுமின்றி ஜித்தன் ரமேஷும் செமயாய் சிரித்தனர். இத்தனை நாட்கள் மனதில் வைத்திருந்த மொத்தத்தையும் இன்று கொட்டி தீர்த்து விட்டார் ரம்யா பாண்டியன்.மொத்தத்தில் ஹவுஸ்மெட்டுகளுக்கே புரிந்துவிட்டது பாலாஜியும் ஷிவானியும் போலியாய் காதலிக்கிறார்கள் என்பது.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × 4 =

*