;
Athirady Tamil News

அவசரகால செயற்பாட்டு செயலணி!!

0

மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

ஊழியர் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்த போதிலும் ஏனையோருக்கு வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய வங்கி தலைமையக வளாகம் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டு தொற்றாளருடன் நெருங்கி பழகியவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

அந்த பரிசோதனை முடிவுகளுக்கு அமைய தொற்றாளரை தவிர ஏனைய ஊழியர்கள் எவருக்கும் தொற்று ஏற்படவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும், ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று (20) முதல் 14 நாட்கள் மத்திய வங்கியின் தலைமை அலுவலகத்தில் பணிபுரிந்த அனைத்து சிரேஸ்ட அதிகாரிகளும் வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமைய மத்திய வங்கியின் அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் எந்தவித தடையும் இன்றி நடைபெறுவதை உறுதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 10 =

*