;
Athirady Tamil News

செட்டிகுளம் பகுதியில் மூன்று பிள்ளைகளின் தந்தை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!! (படங்கள்)

0

செட்டிகுளம் காந்திநகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலத்தினை பொலிஸார் மீட்டெடுத்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

தனிமையில் வசித்து வந்த குறித்த நபர் அவரது வீட்டில் இன்றைய தினம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடப்பதினை அவதானித்த அயலவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செட்டிகுளம் பொலிஸார் மற்றும் கிராம சேவையாளரும் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் 45 வயதுடைய சின்னையா தெய்வேந்திரன் என்ற குடும்பத்தவரேயாகும். .

குறித்த நபரின் மனைவி பிரிந்து தனியாக வாழ்ந்து வந்திருந்தமை பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவருவதுடன் மேலதிக விசாரணை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 − fourteen =

*