;
Athirady Tamil News

மொத்த பாதிப்பு 90.95 லட்சம், சிகிச்சை பெறுவோர் 4.40 லட்சம்… இந்தியா கொரோனா அப்டேட்ஸ்..!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் வேகம் சற்று குறைந்துள்ள போதும் கட்டுக்குள் வரவில்லை. சில மாநிலங்களில் கொரோனா பரவல் வேகம் மீண்டும் அதிகரித்துள்ளது. டெல்லியில் மூன்றாவது அலை பரவத் தொடங்கி உள்ளது. அதேசமயம், நாடு முழுவதும் குணமடையும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 91 லட்சத்தை நெருங்கியது. மொத்த பாதிப்பு 90,95,807 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 45,209 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 501 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,33,227 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 85,21,617 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 43,493 பேர் குணமடைந்துள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 4,40,962 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.46 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 93.69 சதவீதமாக உயர்ந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four + ten =

*