வவுனியாவில் விபத்து : நால்வர் படுகாயம்!! (படங்கள்)
வவுனியா பனிக்கநீராவியில் இடம்பெற்ற தொடர் விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியாவில் இருந்து மரக்கறியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மாட்டுடன் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளார்.
இதனை அவதானித்த அப்பகுதியில் வசித்துவரும் மூவர் அவருக்கு உதவி செய்வதற்காக சென்ற போது வேகமாக வந்த மகேந்திரா வாகனம் நால்வர் மீதும் மோதியுள்ளது.
இவ்விபத்தில் நான்குபேரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையினை ஓமந்தை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”