;
Athirady Tamil News

மூன்று பெண்கள்.. மூன்று விதமான காதல்கள்.. பாலா ஹீரோவா? வில்லனா? வாவ் செம ஸ்க்ரிப்ட்! (வீடியோ, படங்கள்)

0

சனம் ஷெட்டி, ஷிவானி நாராயணன் மற்றும் சுசித்ரா என மூன்று பிக் பாஸ் போட்டியாளர்கள், பாலாஜி முருகதாஸ் எனும் ஒரு ஆண் நபரையே சுற்றி சுற்றி வருகின்றனர்.

இந்த மூன்று பெண்களும் மூன்று விதமான காதல்கள் செய்து வருவதால், ரசிகர்கள் ரொம்பவே குழப்பத்தில் உள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள அனேக போட்டியாளர்கள் நிலையும் இதுவாகத்தான் இருக்கிறது.

விடாத சனம்

பாலாஜி முருகதாஸ், ஷிவானி நாராயணனை தங்கை என கூறி விட்ட நிலையில், நமக்கு இன்னொரு சான்ஸ் இருக்கு ட்ரை பண்ணலாம் என பாலாவுக்கு முன்பாக ஜெயிலுக்குள் போய் நின்று சனம் ஷெட்டி நேற்றைய எபிசோடில் போட்ட சீன் இருக்கே தாங்க முடியவில்லை. நீ வெளியே கிளம்பு என பாலா சொல்லும் வரை அங்கேயே நின்றார்.

கள்ளக் காதலா?

காதல் என்றால் வெளிப்படையாக இருக்க வேண்டும். ஷிவானி நாராயணனும் பாலாஜி முருகதாஸும் பிக் பாஸ் வீட்டில் லவ் பேர்ட்ஸாக சுற்றித்திரிவதை ரசிகர்கள் தப்பாக நினைத்தால் கூட பரவாயில்லை. அர்ச்சனா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, ஆரி என எல்லாருமே நெத்தி பொட்டில் அடித்தது போல சொல்லியும், அண்ணன் தங்கச்சி என பொய்யாக நடித்து காதல் செய்வதற்கு பேர் என்ன என்றே தெரியவில்லை.

என்ன கேரக்டர்னே தெரியல?

இந்த இரண்டையும் விட மூன்றாவதாக ஒன்று இருக்கிறது. அது என்ன கேரக்டர்னே தெரியல.. ஆனால், அந்த சப்ஜெக்ட்டுக்கு பாலா தேவை. பாலா என்னதான் கேவலமாக திட்டினாலும், துப்புன்னா துடைச்சிப்பேன் என்கிற ரீதியில், பாலாவுக்கு விசிறி விட்டு, கண்ணீர் சிந்தும் காட்சிகளில் சுச்சியின் முத்திப் போன காதல் வழிகிறது.

ஹீரோவா? வில்லனா?

பிக் பாஸ் வீட்டில் அத்தனை ஆண்கள் உள்ளனர். ஆனால், அவர்களை எல்லாம் விட்டு விட்டு இப்படி பாலா மாமா பாலா மாமா என அவர் பின்னாடியே திரிவதற்கு அவரது சிக்ஸ்பேக் தான் காரணமா? இல்லை அந்த முரட்டு குணம் தான் காரணமா? என்றும் தெரியவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பாலா ஹீரோவா? வில்லனா? என்றும் தெரியவில்லை. ஆனால், அவர் மன நிலை சரியில்லை என்று மட்டும் நல்லாவே புரிகிறது.

ஈகோ வேற

இதில், சனம் ஷெட்டி வந்தால் ஷிவானிக்கு பிடிப்பதில்லை. ஷிவானி வந்தால் சுச்சிக்கு பிடிக்கவில்லை என ஈகோ பார்த்து இவர்களுக்கு உள்ளே ஷிஃப்ட் எல்லாம் போட்டு பாலாவை காதலிக்கும் வித்தியாசமான ஸ்க்ரிப்ட்டை நான்காவது சீசனில் நல்லாவே பண்ணி வருகின்றனர். அதிலும் மூன்று பேர் பெயரும் Sல் ஆரம்பிப்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் இரிடேட் ஆனாலும், இதை விட்டு விலக முடியாது. அது தான் பிக் பாஸ்.

வைத்தியம் பார்ப்பாரா கமல்

பாலாவுக்கு மட்டும் அல்ல, அவரை சுற்றித் திரியும் மூன்று பெண்களுக்கு கூட கிட்டத்தட்ட அதே மனநிலை தான். சனிக்கிழமை ஆகிடுச்சு, இன்னைக்கு கமல் வந்து இவங்களுக்கு வைத்தியம் பார்ப்பாரா? இல்லை இந்த வாரம் அதிரடியாக இவர்களில் ஒருவரையோ? அல்லது ஜெயிலில் இருக்கும் இருவரையோ விரட்டி அடிப்பாரா? என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம். டபுள் எவிக்‌ஷன் இருந்தா நல்லா இருக்கும்!“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

15 + fourteen =

*