கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் குறைபாடுகள் – ஏற்றுக்கொள்கின்றது அரசாங்கம்!!

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் குறைபாடுகள் காணப்படுகின்றன என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான விசேட நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
கொரோனாவின் இரண்டாவது அலை முதலாவது அலையிலிருந்து வேறுபட்டது என குறிப்பிட்டுள்ள அவர் அரசாங்கம் இந்த மாற்றத்திற்கு தயாராகிவருகின்றது என தெரிவித்துள்ளார்.
மூன்றாவது அலை ஏற்பட்டால் அதற்கு ஏற்றவிதத்தில் அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியிருக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் மூன்றாவது அலை இரண்டாவது அலையிலிருந்து வித்தியாசமாகயிருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் தான் எதிர்கொண்டுள்ள குறைபாடுகள் அனைத்தையும் நாளாந்த அடிப்படையில் தீர்த்துவருகின்றது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுவரை இழைக்கப்பட்ட தவறுகளை சரிசெய்வதற்கான அத்தியாவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் அரசாங்கம் தன்னால் எடுக்ககூடிய நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.