;
Athirady Tamil News

ஒரு செகண்டு.. சோம் தான் வெளியேப் போறாரோன்னு ரம்யா ஃபீல் பண்ணிட்டாங்க.. ட்விஸ்ட் வைத்து பேசிய கமல்! (வீடியோ, படங்கள்)

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4ம் சீசன் 50வது நாளை எட்டி விட்டது. பிக் பாஸ் வீட்டுக்குள் 49 நாட்களும், ஆரம்ப நிகழ்ச்சி ஒரு நாள் என மொத்தம் இன்றைய ஷோ 50வது எபிசோடு. தற்போது வெளியாகி உள்ள இரண்டாவது புரமோவில் சோமசேகர், தான் இந்த 50 நாட்களை எப்படி கடந்தேன் என்பதை அவை அடக்கமாக பேசியுள்ளது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கடைசியில், அதனால, நீங்க இப்பவே வெளியேறினாலும் என கமல் சொன்னவுடன் ரம்யாவோட முகம் அப்படியே மாறி விட்டது.

பாடம் நடத்திய பாலாஜி

இன்றைய முதல் புரமோவில் பாலாஜி முருகதாஸ், தான் 50 நாட்களில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு கத்துக் கொடுத்த பாடங்களை அடுக்கியது சிரிப்பைத் தான் கிளப்பியது. நீ எல்லாம் எங்களுக்கு அட்வைஸ் பண்றியா, ஓ இதெல்லாம் நீங்க சொல்லிக் கொடுத்தீங்களா, சொல்லவே இல்லை என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

கண்ணீர் விட்ட சோம்

இரண்டாவது புரமோவில், எழுந்து நின்று பேசிய சோமசேகர், இதற்கு முன்னாடி என்னை பற்றி யாருக்குமே தெரியாது. இந்த 50 நாட்களில், நான் ஒரு பாக்ஸர், எப்படி காமெடி பண்ணுவேன் என பேசிக் கொண்டே வந்து, தனக்கு இருக்கும் திக்குவாய் பிரச்சனையை மறந்து இந்த பிக் பாஸ் வீட்டில் பேசி வருகிறேன் என்பதைக் கூறி கண்ணீர் விட்டார்.

அரவணைத்த கேபி

பேசிவிட்டு கலங்கிய கண்களுடன் அமர்ந்த சோமசேகருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக கேபி அரவணைத்துக் கொண்டார். மற்ற ஹவுஸ்மேட்களும், சோம் மேல இதுவரைக்கும் எந்தவொரு பெரிய புகாரையும் சொல்லாதது குறிப்பிடத்தக்கது. ஆனால், சட்டென கமல் எவிக்‌ஷன் பற்றி பேசியதும், எல்லாமே ஸ்தம்பித்தனர்.

சோம் வெளியேறுகிறாரா?

திக்குவாய் பிரச்சனை எல்லாம் ஒரு பிரச்சனையும் இல்லை, அந்த டெஸ்ட்ல நீங்க பாஸ் ஆகிட்டீங்க, நல்லாவே பேசுறீங்க என பாராட்டிய கமல், திடீரென, அதனால, இப்போ நீங்க வெளியே போனாக் கூட எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது என்று ட்விஸ்ட்டாக பேசி பிக் பாஸ் போட்டியாளர்களை ஒரு செகண்ட் அலறவிட்டார்.

ரம்யா ரியாக்‌ஷன்

சோமுக்கும் ரம்யாக்கும் தனியா ஒரு லவ் டிராக் ஆரம்பித்து வைக்கும் முயற்சியில் பிக் பாஸ் ஈடுபட்டு இருந்தார். ஆனால், எந்த காதல் வலையிலும் சிக்கக் கூடாது என்பதில், கவனமாக இருக்கும் ரம்யா பாண்டியன், சேஃபா சோமிடம் இருந்து விலக ஆரம்பித்து விட்டார். ஆனால், சோம் வெளியேறுகிறார் என்பது போல கமல் சொன்னதும், ரம்யாவின் முகம் அப்படியே வாடிப் போனது.

சூப்பரா சேவ் பண்ண கமல்

அதனால, இப்போவே நீங்க வெளியேற்றப்பட்டாலும் வருத்தப்படுவதற்கு ஒன்றுமே இல்லை எனக் கமல் கூறியதும் ரம்யா உள்ளிட்ட ஹவுஸ்மேட்கள் முகம் மாறியது, உடனடியாக அதனால, உடனே உங்களை வெளியேற்றிடுவாங்கனு நீங்க நம்ப வேண்டிய அவசியமில்லை. யு ஆர் சேஃப் என கமல் சொன்னதும் தான் ரம்யாவுக்கும் சோமுக்கும் மூச்சே வந்தது.

அப்போ பாலாவும்

இரண்டாவது புரமோவில் சோமசேகரை கமல் காப்பாற்றிய நிலையில், முதல் புரமோவில் பாலா பேசி முடித்ததும், அவரையும் கமல் காப்பாற்றியிருப்பார் என்றே ரசிகர்கள் கணிக்கத் தொடங்கி விட்டனர். சுசித்ரா மட்டும் தானே வெளியே போறாங்க, மத்த எல்லாரும் சேஃப் தான். இவங்க கிட்ட டபுள் எவிக்‌ஷன்லாம் எதிர்பார்க்க முடியாது. 200 நாள் போகும் போல என்றும் கலாய்த்து வருகின்றனர்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eight − 5 =

*