;
Athirady Tamil News

முதலிரவில்.. உனக்கு இவ்வளவு அழகா.. இன்னுமா கற்புடன் இருக்கே.. 2020ஐ அதிரவைத்த பெண்கள், மாப்பிள்ளைகள்!! (படங்கள்)

0

ஆயிரம் கனவுகளுடன் முதலிரவு ரூமுக்குள் காலடி எடுத்து வைப்பார் புதுப்பெண்.. அந்த வகையில் பலவித எதிர்பார்ப்பு, ஆசைகளுடன் அந்த அறைக்குள் சென்ற சிலரது வாழ்க்கை அப்படியே புரட்டி போட்டுள்ளது.. இதில் வாழ்க்கையை தொலைத்தது அப்பாவி பெண்கள் மட்டுமில்லை, சில பரிதாப ஆண்களும்தான்.. அந்த வகையில், 2020-ல் நடந்த முதலிரவு சோக சம்பவங்களின் ஒரு தொகுப்புதான் இது!

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள மீரா சாலையை சேர்ந்த நபருக்கு 29 வயதாகிறது.. ரொம்ப நாளாக பெண் தேடி கடைசியில் சமீபத்தில்தான் கல்யாணம் ஆனது.

பிறகு ஒரு வழியாக கல்யாணம் நடந்தது.. ஆனால், அந்த கல்யாண பெண் திடீரென தன்னுடைய கணவர், மீது நயநகர் போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகார் தந்தார்..

முதலிரவு

அதில், “கடந்த செப்டம்பரில் எனக்கு கல்யாணம் ஆனது.. முதலிரவில் என்னை பற்றின எல்லா உண்மையும் சொன்னேன்.. ஆனால் அவர் எதையும் சொல்லவில்லை.. முதலிரவு முடிந்தது.. பிறகுதான் அவருக்கு தலையில் வழுக்கை இருப்பது தெரிந்தது. முதலிரவு அன்று விக் வைத்து அந்த வழுக்கையை மறைத்துள்ளார்.. நானும் இது தெரியாமலேயே அவருக்கு மனைவியாகி விட்டேன்.. எனக்கு டைவர்ஸ் வேண்டும்” என்று வந்து கேட்டார்.

செல்போன்

இது சம்பந்தமான போலீசார் விசாரித்து வருகின்றனர்.. அந்த கணவன் மனைவியின் செல்போனை ஹேக் செய்து சேட்டிங், வீடியோ கால், மெசேஜ்களை அடிக்கடி கண்காணித்தும் வந்திருக்கிறார்.. இதை தவிர, மனைவியுடன் வலுக்கட்டாயமாக உடலுறவு வைத்து கொண்டாராம். இப்படி ஒரு சம்பவம் புனேவில் நடந்தது.

சந்தேகம்

அடுத்து நம் வேலூரில் ஒரு சம்பவம் நடந்தது.. ஊசூர் அருகே கோவிந்தரெட்டி பாளையத்தை சேர்ந்த சந்திரலேகாவுக்கு காட்பாடியை சேர்ந்த பாலாஜி என்பவருடன் கல்யாணம் செய்து வைத்தனர்.. பாலாஜி முனைவர் பட்டம் பெற்றவர்… சேலத்தில் ஒரு தனியார் காலேஜில் புரபொசராக வேலை பார்த்து வருகிறார். கல்யாணம் ஆன ஒரு வாரத்திலேயே சந்திரலேகா பாத்ரூமில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்… அப்போதுதான் போலீஸ் விசாரணையில் ஒரு கடிதம் கிடைத்தது..

முதலிரவு

அதில்,”முதலிரவு அன்னைக்கே என் மேல கணவர் சந்தேகப்பட்டார்..”நீ இவ்ளோ அழகா இருக்கியே. இன்னுமா நீ கற்புடன் இருக்கே? உன்னை யாருமே காதலிக்கவில்லையா? நீ யாரையாவது காதலித்து இருக்கியா?.. ஒருவேளை நீ காதலித்த பையன் மறுபடியும் வந்தால், என்னை விட்டுட்டு அவனுடன் ஓடிப்போய்டுவியா” என்று கேட்டு தினமும் டார்ச்சர் தந்துள்ளார். முதலிரவு முழுவதும் டார்ச்சர் தந்திருக்கிறார். கடைசியில் ஒரே வாரத்தில் கரிக்கட்டையாகிவிட்டார் சந்திரலேகா.

கன்னியாகுமரி

அதேபோல, கன்னியாகுமரியில் முதலிரவு ரூமுக்குள் ஆசை ஆசையாக முதலிரவுக்கு ரூமுக்குள் நுழைந்தார் மாப்பிள்ளை.. அங்கே அவரது 17 வயது மனைவி தன் காதலனுடன் போனில் பேசிக் கொண்டிருப்பதை கண்டு அதிர்ந்தார்.. மகள் காதலிப்பது தெரிந்ததும், காதும் காதும் வைத்த மாதிரி இந்த மாப்பிள்ளையை கல்யாணம் செய்து வைத்துள்ளனர்.. ஆனால், சிறுமியோ காதலனை மறக்க முடியாமல் தவித்தார்.

விடியாத இரவுகள்

முதலிரவு அன்றே, அந்த காதலன் சுவர் ஏறி குதித்து சிறுமியின் வீட்டுக்கும் வந்துவிட்டார்.. அவரை பார்த்ததும் சிறுமி ஒரு கட்டத்தில் அழ ஆரம்பித்துவிடவும் அதற்கு மேல் என்ன செய்வதென்றே தெரியாமல் அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார் அந்த பரிதாப மாப்பிள்ளை. இப்படி விடியாத முதலிரவுகளில் பலவித வினோதங்களையும், சங்கடங்களையும் கடந்து வந்துள்ளது இந்த 2020!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − fifteen =

*