பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை வரை ஒத்திவைப்பு!! (வீடியோ)

மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி பருத்தித்துறை, வல்வெட்டித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸாரால் பருத்தித்துறை நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் குறித்த மூற்று பொலிஸாரினாலும் மீளப்பெறப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இன்று மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று பிற்பகல் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் நீதிபதி வழக்குத் தொடர்பிலான தீர்ப்பினை நாளை வழங்குவதாக அறிவித்து வழக்கினை ஒத்திவைத்துள்ளார்.
பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில் எதிராளிகள் தரப்பில் சட்டத்தரணிகள் வி. மணிவண்ணன், க.சுகாஸ் ஆகியோர் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
மாவீரர் நாள் நினைவேந்தல் தடை கோரி பருத்தித்துறை நீதிமன்றில் மீளவும் விண்ணப்பங்கள்!!
ஊடகவியலாளர்கள் இரண்டு பேருக்கு எதிராக கோப்பாய் பொலீசார் வழக்கு தாக்கல்!!
கிளிநொச்சியில் மாவீரர் நாள் நினைவேந்தல் நடை உத்தரவு!! (படங்கள்)
நவம்பர் 27நினைவேந்தல் விவகாரத்தை பாதுகாப்பு அமைச்சு கையாளும்! பொலிஸார் மனுவை மீளப்பெற்றனர்!!
வடமராட்சியில் நினைவேந்தலுக்கு தடை கோரிய விண்ணப்பங்களை மீளப்பெற்றனர் பொலிஸார்!!
நினைவேந்தல் தடையை நீக்கக் கோரும் விண்ணப்பம் மன்னார் நீதிமன்றால் நிராகரிப்பு!!