பாடசாலை மாணவர்களுக்காக 746 பஸ்கள் சேவையில் இணைப்பு!!

மாணவர்களைப் பாடசாலைக்குப் பாதுகாப்பாக அழைத் துச் செல்ல 746க்கும் மேற்பட்ட பஸ்கள் சேவையில் ஈடு படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
பாடசாலைகளை மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்துக் கொள்கைக்கு அமைவாக மாணவர் களுக்குச் சுகாதாரமான போக்குவரத்தை வழங்க இந்த பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்கு வரத்து சபையின் துணை பொது மேலாளர் தெரிவித் துள்ளார்.
மேலும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பழுதான 400 பஸ்கள் ஜனவரி முதலாம் திகதிக்குள் மீண் டும் இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்தார்.
அத்தோடு நாடு முழுவதும் 746 பஸ் சேவைகள் இடம் பெறு வதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய பகுதிக்கு இச் சேவை செயற்பட்டு வரு வதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் சில பகுதிகளில் பாடசாலைகளுக்கான பஸ்களில் ஏதேனும் பிரச்சினைகள் காணப்பட்டால் அச் சேவை உடனடியாக நிறுத்தப்படு என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.