;
Athirady Tamil News

சீதுவையில் ஒரு வயது குழந்தை உட்பட அதே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா தொற்று!!

0

சீதுவ, ரத்தொலுகம பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட எட்டு பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க சீதுவை நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் சுரேஷ் குமார தெரிவித்தார்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான குடும்பத்தில் ஒரு வயது குழந்தையும் அவரது தாயும் நோய் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுரேஷ் குமார மேலும் தெரிவித்தார்.

அத்துடன் கம்பஹா மாவட்டத்தில் இன்று மாலை 04 மணிவரை முடிவடைந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான 71 பேர் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, கம்பஹா மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 5,094 ஆக பதிவாகியுள்ளதாக கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார ஏப்பா தெரிவித்தார்.

இவ்வாறு பதிவான 71 நோயாளர்களில் 18 பேர் வத்தளை சுகாதார பிரிவிலும், 10 பேர் பியகம சுகாதார பிரிவிலும் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, இன்று மாலை வரை கம்பஹா மாவட்டத்தில் 76,246 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மிகார ஏப்பா தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

பண்டாரகம, கண்டியில் சில கிராம சேவையாளர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில்!!

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் – அஜித் ரோகண!

கொவிட்-19 காரணமாக இறப்பவரின் தகனக்கிரியைக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே செலவழிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர்!!

கிளிநொச்சியில் ஐவருக்கு covid – 19 தொற்று உறுதியானது !!

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

அலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்!!

தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!

கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!

பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!

இதுவரை 28,472 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!

கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!

அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 10 =

*