;
Athirady Tamil News

யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் இன்று காலையிலிருந்து வழமைக்கு திரும்பியுள்ளது.!!

0

யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் இன்று காலையிலிருந்து வழமைக்கு திரும்பியுள்ளது.

யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்கள செயற்பாடுகள் இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் க. நடராஜா அறிவித்துள்ளார்

யாழ் மாவட்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில் இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கான சேவை இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்.

பதிவாளர் திணைக்களஅலுவலக ஊழியர்கள்,மாவட்ட செயலகஉத்தியோகத்தர்கள் இணைந்து நேற்று முழுநாளும் செயற்பட்டதன் காரணமாக இன்றிலிருந்து பொது மக்களுக்கான சேவைவழமை போல் இடம்பெறும் என தெரிவித்தார்.

யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்கும் பதிவாளர் நாயகம் திணைக்கள அலுவலகமானது கடும் மழையின் தாக்கத்தினால் நான்கு மாடிகளைக் கொண்ட குறித்த கட்டிடத்திற்குள் மழை நீர் உட்புகுந்து அலுவலகம் முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது .

வெள்ளம் உட்புகுந்த குறித்த அலுவலகத்தினை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ஆகியோர் விஜயம் மேற்கொண்டு குறித்து அலுவலகத்தினை பார்வையிட்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × two =

*