;
Athirady Tamil News

செட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கி வைப்பு!! (படங்கள்)

0

செட்டிக்குளத்தில் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவு எம்.சி.எம். லங்கா நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
வவுனியா அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயத்தின் தரம் 01 தொடக்கம் தரம் 05 வரையான ஆரம்பபிரிவு 221 மாணவர்களுக்கு இலவச சத்துணவு வழங்கப்பட்டது.

யுத்தத்தில் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 12 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு 2009 ஆம் ஆண்டு தொடக்கம் குறித்த நிறுவனத்தால் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக பாடசாலைகளில் கல்வி கற்கும் ஆரம்பபிரிவு மாணவர்களுக்கு இலவச சத்துணவும், இலவச கல்வியும் வழங்கப்பட்டு வருகின்றது.

வெண்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட, அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் மற்றும் சண்முகானந்தா வித்தியாலயம் ஆகியவற்றின் ஆரம்ப பாடசாலை மாணவர்களின் பெற்றார்களிடம் குறித்த சத்துணவுப் பொதிகள் எம்.சி.எம். லங்கா நிறுவனத்தின் அதிகாரிகளால் கையளிக்கப்பட்டிருந்தது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

12 − 11 =

*