;
Athirady Tamil News

வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!! (வீடியோ, படங்கள்)

0

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குற்பட்ட வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 2 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கரவெட்டி பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று முற்பகல் 10 மணிக்கு தவிசாளர் தங்கவேலாயுதம் ஐங்கரனால் சபையில் முன்வைக்கப்பட்டுள்ளது.

31 உறுப்பினர்களைக் கொண்ட வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையில் வரவு செலவு திட்ட வாக்கெடுப்பின் போது 16 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 14 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்த அதே வேளை ஒரு உறுப்பினர் சபை அமர்பில் கலந்துகொண்டிருக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 8 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 3 உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் என 16 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 7 உறுப்பினர்கள் மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸுன் 7 உறுப்பினர்கள் என 14 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ள அதே வேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர் ஒருவர் சபைக்கு சமூகமளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × 1 =

*