;
Athirady Tamil News

யாழ்- சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபான சாலை என்பன மறு அறிவித்தலை வரை பூட்டு!! (வீடியோ, படங்கள்)

0

யாழ்ப்பாணம் – சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபான சாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேர் குடும்பத்துடனும், சைக்கிள் கடை ஒன்றினைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்களும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை 3 நாள்கள் மூடப்பட்டுள்ளது.

சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் குறித்த நடவடிக்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றனர்.

கடந்த 21ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையிலிருந்து காரைநகருக்கு வருகை தந்த அவர், 3 நாள்களுக்கு மேல் பல இடங்களுக்கு நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவர் சென்றதால் வைத்தியசாலையை 3 நாள்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையின் சேவையாளர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த நபர் சங்கானை மீன் சந்தைக்குச் சென்றதால் அதனை மறு அறிவித்தல் வரை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் 36 வியாபாரிகள் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் அவர் சைக்கிள் கடைக்குச் சென்ற நிலையில் அங்கு இருந்த 6 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சங்கானை மதுபான சாலைக்குச் சென்றார் என்று கண்டறியப்பட்ட நிலையில் மதுபான சாலை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அங்கு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் குடும்பத்துடன் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படவுள்ளனர். அதில் தொற்று இல்லை என்று முடிவு கிடைத்தால் மீன் சந்தை, மதுபான சாலை என்பன திறக்க அனுமதிக்கப்படும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!

மேலும் 294 பேருக்கு கொரோனா!!

கொவிட்-19 காரணமாக இறப்பவரின் தகனக்கிரியைக்கு அவர்களது குடும்ப உறுப்பினர்களே செலவழிக்க வேண்டும்: சுகாதார அமைச்சர்!!

கிளிநொச்சியில் ஐவருக்கு covid – 19 தொற்று உறுதியானது !!

யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!

சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

அலரி மாளிகை தனிமைப்படுத்தப்படவில்லை – பிரதமர் அலுவலகம்!!

தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!

மேலும் 230 பேருக்கு கொரோனா தொற்று!!

கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!

கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!

பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!

நேற்றைய தினம் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் விபரம்!!

இதுவரை 28,472 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில்!!

கொழும்பின் எல்லைகளை மூடவேண்டும்- ரோசி சேனநாயக்க!!

கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!

நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!

அமெரிக்க கொரோனா தடுப்பூசி குறித்து சஜித் தெரிவித்தது என்ன?

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 13 =

*