முல்லைத்தீவிலிருந்து ஆமை வேகத்தில் பயணித்த பேரூந்து – பயணிகள் விசனம்.!! (படங்கள்)
முல்லைத்தீவிலிருந்து ஆமை வேகத்தில் வவுனியா நோக்கி பயணித்த பேரூந்து காரணமாக பயணிகள் அளெசரியத்திற்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவிலிருந்து இன்று (28) காலை 9.30 மணிக்கு வவுனியா நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஆமை வேகத்தில் பயணித்த காரணத்தால் வவுனியா பொது வைத்தியசாலை மற்றும் இதர தேவைகளுக்காக பயணித்த பயணிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை என விசனம் வெளியிட்டுள்ளனர்.
காலை 9.30 மணிக்கு புறப்பட்ட பேரூந்தானது மதியம் 12.00 மணிக்கு வவுனியாவை வந்தடைய வேண்டிய நிலையில் மதியம் 1.00 மணிக்கே வவுனியாவை சென்றடைந்ததாக பயணிகள் கவலை வெளியிட்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”