;
Athirady Tamil News

பிரிட்டனை விரட்டும் கொரோனா – 16 லட்சத்தை தாண்டியது பாதிப்பு..!!

0

கொரோனா வைரசின் கோரப்பிடியில் சிக்கி உலகம் முழுவதும் பாதிப்பு அடைந்தோர் 6 கோடியைக் கடந்துள்ளது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியுள்ளது. 14 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்

உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 7-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்தைக் கடந்துள்ளது.

ஒரே நாளில் 15 ஆயிரத்து 871 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது

கொரோனா வைரஸ் காரணமாக அங்கு 479 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × four =

*