கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகளுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவர் பேருந்தில் இருந்து இறங்கியதும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற அவரது தாயார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ளார். அவர் தனக்கு காய்ச்சல் உள்ளதாகவும் உடல்நிலை சரியில்லை என்றும் தாயாருக்கு அறிவித்துள்ளார். அதனால் தாயார் அவரை யாழ்ப்பாணம் நகர் பேருந்து நிலையத்துக்குச் சென்று அல்லைப்பிட்டியுள்ள வீட்டு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் அந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொவிட் -19 தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
அவரது மாதிரிகள் பிசிஆர் பரிசோதைக்காக எடுக்கப்பட்டுள்ளன. இன்று பிசிஆர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும்.
அத்துடன், இளைஞனின் தாயார் வேலணை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”
யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)
வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!
சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!
கிளிநொச்சி மாவட்டத்தில் மேலும் இருவருக்கு கொவிட் -19 நோயாளிகள் அடையாளம்!!
கொரோனாவுக்கு மற்றொருவரும் பலி – மரணமானோர் எண்ணிக்கை 74 ஆக உயர்வு!!
பச்சை மீன் உட்கொள்வது நல்லதல்ல – அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம்!!
கொழும்பு நகரத்தில் எந்த தரையிலும் வைரஸ் காணப்படலாம் – பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர்!!
நாட்டில் கோவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.!!
இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்தை தாண்டியது!!