45 மில்லியன் ரூபாய் செலவில் பண்டாரிக்குளம் வீதி திருத்த பணி ஆரம்பித்து வைப்பு!! (படங்கள்)
45 மில்லியன் ரூபாய் செலவில் வவுனியா, பண்டாரிக்குளம் வீதி திருத்தப் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் அவர்களால் குறித்த வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பண்டாரிக்குளம் பிரதான வீதியானது நீண்ட நாட்களாக திருத்தப்படாத நிலையில் உள்ளது. 2.45 கிலோ மீற்றர் நீளமான குறித்த வீதியானது சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் கிராமிய வீதி மற்றும் உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சின் ஊடாக 45 மில்லியன் ரூபாய் செலவில் திருத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்களான சுமந்திரன், நிரோசன், வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானாவடு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியிலாளர், கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”