;
Athirady Tamil News

வலி.வடக்கு பிரதேசசபை பாதீடு: ஆதரவு 30; எதிர் 3; நடுவுநிலை 01! (படங்கள்)

0

வலி.வடக்கு பிரதேசசபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் அங்கீகரிப்பது தொடர்பான விசேட கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணிக்கு சபையின் தலைமை அலுவலக மாநாட்டு மண்டபத்தில் தவிசாளர் சோ.சுகிர்தன் தலைமையில் நடைபெற்றது.

தலைமையுரையைத் தொடர்ந்து வரவு – செலவுத் திட்டம் மீதான விவாதம் நடைபெற்று வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து பாதீடு மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் காலமாகியுள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார். மீதமுள்ள 37 உறுப்பினர்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றில் தலா ஓர் உறுப்பினர் வீதம் 3 உறுப்பினர்கள் சபை அமர்வுக்குச் சமுகமளிக்கவில்லை.

வாக்கெடுப்பில் 30 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 16, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 4, ஐக்கிய தேசியக் கட்சி 2, தமிழர் விடுதலைக் கூட்டணி – 2, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 6 உறுப்பினர்கள் ஆதரவாகவும் –

சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த ஓர் உறுப்பினர் நடுநிலை வகித்தார். 27 மேலதிக வாக்குகளால் பாதீடு நிறைவேற்றப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சண்முகலிங்கம் சஜீவன் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 5 =

*