வவுனியா அலகல்ல பகுதியில் யானைகள் அட்டகாசம்: சம்பவ இடத்திற்கு விரைந்த அரசாங்க அதிபர்!! (படங்கள்)
வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அலகல்ல பகுதியில் யானைகள் அட்டகாசத்தினால் வாழை , தென்னை , நெல் போன்றன நாசமாகியுள்ளது.
கடந்த சில நாட்களாக தினசரி அப்பகுதிக்கு வருகை தரும் காட்டுயானைகள் கிராமத்திலுள்ள நெல் செய்கைகள் , தென்னைந்தோட்டம் , வாழைத்தோட்டம் என்பவற்றினை சேதப்படுத்தி வருவது தொடர்பில் அப்பகுதி மக்களினால் அரச அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதனையடுத்து இன்று (30.11) வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன அவர்கள் நேரில் சென்று நிலமைகளை பார்வையிட்டதுடன் விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.
காட்டு யானையின் அச்சுருத்தலினால் நாளந்தம் அச்சத்துடனும் பீதியுடனும் குழந்தைகளுடனும், வயோதிபர்களுடனும் நிம்மதியிழந்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”