;
Athirady Tamil News

முதன்முறையாக இணையவழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டம்!! (படங்கள்)

0

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவைக் கூட்டம் இணையவழியில் நேரலையாக (Online Streaming) இடம்பெற்றது என்று பிரதமரின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த நடைமுறை இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பின்பற்றுள்ளது.

அமைச்சர் தமது அலுவலகங்களிலிருந்து இணைய வழி நேரலையில் அமைச்சரவைக் கூட்டதில் பங்கேற்றனர்.

இதுதொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு்ளளதாவது;

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக, அமைச்சரவைக் கூட்டம் இன்று (30) காணொலித் தொழில்நுட்பத்தின் மூலம் நடைபெற்றது.

ஜனாதிபதி கோதாபபய ராஜபக்ச தலைமையில் பிரதமர் மற்றும் அமைச்சரவை அமைச்சர்களும் இதில் இணைந்தனர். கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.

கோவிட்-19 தொற்றுநோய் மட்டுமல்லாமல் செயல்திறன், வசதி, நேரம் மற்றும் செலவு சேமிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு காணொலி தொழில்நுட்பத்தில் அமைச்சரவைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும் பயன்படுத்துவதற்கும் ஜனாதிபதி முன்னுரிமை அளித்துள்ளார். இது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் கொள்கை அறிக்கையிலும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதைக் கருத்தில் கொண்டு ஜனாதிபதி சமீபத்தில் தனது கண்காணிப்பில் தொழில்நுட்ப அமைச்சை எடுத்துக் கொண்டார்.

21 ஆம் நூற்றாண்டில் புதிய தொழில்நுட்பத்துடனான ஒரு சமூகத்தை உருவாக்க கல்வித்துறையில் முதலீட்டை பொருளாதாரத் துறையுடன் ஒருங்கிணைப்பதாக அரசு நம்புகிறது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு கலாச்சாரத்தை உருவாக்குவது ஜனாதிபதியின் நோக்கமாகும்.

அரசு இயந்திரங்கள் மற்றும் சந்தை செயல்முறைகளை எளிமைப்படுத்துவது மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கான ஒரு கருவியாக தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் டிஜிட்டல் நிர்வாகத்தை விரிவுபடுத்துவது புதிய அமைச்சின் முன்னுரிமையாகும்- என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 2 =

*