கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடப்பட்டுள்ள அக்கரைப்பற்று!!

அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதி இத்தருணத்தில் இருந்து கடும் சுகாதார பாதுகாப்பு வலயமாக பெயரிடுவதற்கு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
சுகாதார மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் ஒத்துழைபை பெற்று பொதுமக்கள் இந்த தனிமைப்படுத்தல் சட்டம் தொடர்பில் கடைப்பிடிக்கும் முறைகள் குறித்து கண்டறியுமாறு ஆளுநர் மாகாண அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கிழக்கு மாகாண அளுநரின் ஊடக பிரிவு விடுத்துள்ள ஊடக அறிக்கையில், அக்கரைப்பற்று பிரதேசத்தில் பதிவாகும் கொரோனா தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது இந்த பிரதேசத்தில் 58 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர். அத்தோடு கல்முனை பிரதேசத்தில் இதுவரையில் 86 நோயாளர்கள் பதிவாகி இருப்பதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஏ.லதாஹரன் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைமையை கருத்தில் கொண்டு அக்கரைப்பற்று பொலிஸ் எல்லைப்பகுதிக்குள் வாழும் எந்தவொரு நபரும் தமது வீடுகளில் இருந்து வெளியேறக்கூடாது என்று ஆளுநர் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த பிரதேசத்திற்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் நடமாடும் வாகன சேவைகள் மூலம் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஆளுநர் சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!
கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!
யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)
வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!
சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!