கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 110 குடும்பங்களுக்கு உலர் உணவு!! (வீடியோ, படங்கள்)

யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் ஏற்பாட்டில் யாழ் மாவட்டத்தில் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் பருத்தித்துறை பிரதேசபிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த தினங்களில் பெய்த அடைமழை காரணமாக தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற நிலையில் மிகவும் பாதிக்கப்பட்டு நிலையில் வாழ்ந்து வரும் தெரிவுசெய்யப்பட்ட 60குடும்பங்களுக்கும் ,
ஆத்தோடு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குப்பட்ட 20 குடும்பங்களுக்கும், சங்கானை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 30 குடும்பங்களுக்கும், கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
சுமார் இரண்டாயிரம் ரூபா பெறுமதியான 110 உலர் உணவு பொதிகள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் கியூமெடிக்கா தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர்கள், யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ,சூரியராஜ், சண்டிலிப்பாய் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள் ,மற்றும் அப்பகுதி கிராம உத்தியோகத்தர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”