மஹர சிறைச்சாலையில் மோதல்: மேலும் 107 பேருக்கு காயம்!!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையில் காயமடைந்த சிறைக்கைதிகளின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது.
சிறைச்சாலை மோதலில் பெரும்பானோர் காயமடைந்த தாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹாண தெரிவித்தார்.
அத்துடன் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளது இது குறித்து இன்று நீதவான் நீதிமன்றில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.
சிறைச்சாலையைப் பாதுகாக்க பொலிஸ் அதிகாரிகள் மற்றும் விசேட பொலிஸ் பணிக்குழு உறுப்பினர்கள் மேலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
அத்துடன், சேதங்கள் குறித்து மதிப்பீடு பெறப்பட வேண் டும் என்றும் அஜித் ரோஹாண தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தில் காயமடைந்து ராகம போதனா வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்ட 10 கைதிகள் ஆபத்தான நிலையில் இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அத்துடன், சுமார் 15 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைக்குள் நேற்று முன்தினம் ஏற்பட்ட பதற்றமான சூழ் நிலையில் எட்டு கைதிகள் கொல்லப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் இரண்டு சிறை அதிகாரிகள் அடங்குவதாகவும், அவர்கள் ஆபத்தான நிலையில் இருப் பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குற்றத் தடுப்பு பிரிவினர், சிறைச்சாலை திணைக்களம் மற்றும் நீதி அமைச்சு ஆகியன குறித்த விசாரணைகள் தனித்தனியாக மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத் தக்கது.
149 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!!
காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!
கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!
யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)
வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!
வட்டவளை, குயில்வத்தை பகுதியைச் சேர்ந்த உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனுக்கு கொரோனா!!
யாழ்ப்பாணத்தில் 70 வயதுடைய வயோதிபப் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ்!!
சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!
தனிமைப்படுத்தப்பட்டது அலரி மாளிகை – பணியாளர்களை கடமைக்கு வரவேண்டாம் என அறிவிப்பு!!