கேமராக்களின் கண்ணில் மண்னை தூவி.. ஷிவானிக்கு முத்தம் கொடுத்த பாலாஜி.. தீயாய் பரவும் வீடியோ! (வீடியோ, படங்கள்)

பிக்பாஸ் வீட்டில் பாலாஜி, ஷிவானிக்கு முத்தம் கொடுத்த வீடியோ தீயாய் பரவி அதிர வைத்து வருகிறது. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருபவர் பாலாஜி முருகதாஸ்.
பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே ஏகப்பட்ட பொய்களை கூறியுள்ளார் பாலாஜி.
குறும்படம்
இதனை அவ்வப்போது சோஷியல் மீடியாவில் குறும்படங்களாக போட்டு பாலாஜியின் முகத்திரையை கிழித்து வருகின்றனர் நெட்டிசன்கள். பிக்பாஸ் வீட்டிலும் சக ஹவுஸ்மேட்ஸ் முன்பு டபுள் கேம் ஆடி, குட்டையை குழப்பி மீன் பிடித்து வருகிறார்.
ரொம்ப நெருக்கம்
பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் அன்பாக இருப்பது போன்று நடிக்கிறார்கள், எல்லாம் கேம் ஸ்ட்ரேட்டர்ஜி என கூறி வருகிறார். ஆண் போட்டியாளர்களை காட்டிலும் பெண் போட்டியாளர்கள் சிலரிடம் ரொம்பவே நெருக்கமாக உள்ளார்.
வேற லெவல் நெருக்கம்
குறிப்பாக ஷிவனியுடன் கட்டிப்பிடிப்பது, ஊட்டி விடுவது இடுப்பில் கை வைப்பது, இடித்து தள்ளுவது என வேற லெவல் நெருக்கம் காட்டி வருகிறார் பாலாஜி. ஷிவானியும் பாலாஜியுடன் ரொம்பவே நெருக்கமாக உள்ளார்.
காதலா என சந்தேகம்
அவருக்கு மசாஜ் செய்வது, ஊட்டிவிடுவது, டான்ஸ் ஆடுவது, எப்போதும் ஒட்டி உரசி இருப்பது என பாலாஜியை விட்டு பிரிவதே இல்லை. ஹவுஸ்மேட்ஸ் பலருக்கும் பாலாஜிக்கும் ஷிவானிக்கும் இடையி இருப்பது காதலோ என்ற சந்தேகம் உள்ளது.
காதலா அன்பா?
ஆனால் எங்களுக்குள் இருப்பது நட்புதான் என்றே இருவரும் கூறி வருகின்றனர். கால் டாஸ்க்கில் ஆரி ஷிவானியிடம் பேசிய போதும், உங்களுக்குள் இருப்பது காதலா அன்பா என்று கேட்டார். அதற்கு நட்புதான் என்று அடித்து சொன்னார் ஷிவானி.
கார்டன் ஏரியாவில்
இந்நிலையில் பாலாஜியும் ஷிவானியும் பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது பிக்பாஸ் வீட்டில் இரவு நேரத்தில் சாரல் மழை பெய்து கொண்டிருக்கிறது. ஷிவானியும் பாலாஜியும் கார்டன் ஏரியாவில் தனியாக நடந்து கொண்டிருக்கின்றனர். ஷிவானிக்கு முத்தம்.. அந்த நேரத்தில் ஹவுஸ் மேட்ஸ் யாரும் பார்க்காத தருணத்தில் கேமராக்கள் பார்க்கவில்லை என நினைத்து ஷிவானிக்கு முத்தம் கொடுக்கிறார் பாலாஜி. ஆனாலும் அந்த காட்சி கேமராக்களின் கண்களில் பட்டு காட்சியாகி விட்டது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி முருகதாஸை கண்டப்படி கழுவி ஊற்றியுள்ளனர். இப்படி ஒரு பெண்ணுக்கு பலவந்தமாக முத்தம் கொடுப்பதுதான் ஆம்பளையா? என்றும் இதற்கு பெயர்தான் ஃபிரண்ட்ஷிப்பா என்றும் கேட்டுள்ளனர்.
எல்லை மீறுகின்றனர்
மேலும் பாலாஜி முருகதாஸை பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்ப வேண்டும். பாலாஜி நேர்மையான ஆள் இல்லை. இந்த ஒரு வீடியோ மட்டுமில்ல ஷிவானியும் பாலாஜியும் பிக்பாஸ் வீட்டில் எல்லை மீறி பல வேலைகளை செய்து வருகின்றனர் என்றும் விளாசி வருகின்றனர்.
நீச்சல் குளத்தில்
பாலாஜி முருகதாஸ் ஏற்கனவே பீச்சில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து இருந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும் நீச்சல் குளத்தில் அரை நிர்வாண கோலத்தில் இளம் பெண் ஒருவரை தலைக்கு மேல் தூக்கி தம்பெல்ஸ் எடுப்பது போல் தூக்கினார்.
பெண்ணின் பெயர்
அதனை பார்த்த நெட்டிசன்கள் இதனை ஷிவானி பார்த்தால் என்னாகும் என்று கேட்டு வைரலாக்கினர். இதனிடையே பாலாஜி தனது கையில் ஒரு பெண்ணின் பெயரை கிறுக்கி வைத்திருப்பதாகவும் கால் டாஸ்க்கின் போது அந்த பெயரை காட்டுமாறும் கூறினார்.
யாருடைய பெயர்?
அந்த பெயரை பாலாஜி காட்டினார். ஆனால் அது காட்டப்படவில்லை. இந்நிலையில் பாலாஜி ஷிவானிக்கு முத்தம் கொடுத்ததை பார்த்த நெட்டிசன்கள் கையில் கிறுக்கி வைத்திருக்கும் பெயர் யாருடையது? ஷிவானியுடைய பெயரா அல்லது வேறு யாருடையதேனுமா என்று கேட்டு வருகின்றனர்.
so call #aambala #balajimurugadass call this is a friendship.. #bullshit.. #balajimurugadoss should go outside.. he is not at all a #honest hm. it's depends on not only this video, many activities #shivani and #balajimurugadass doing in #biggbosstamil4 house. #accepted or not?! pic.twitter.com/okJrbRNJ9h
— Tamizha Vaa Ennodu (@tamizhaVaEnnodu) November 28, 2020
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss