வவுனியாவில் பாடசாலைக்கு சென்ற மாணவிக்கு திடீர் சுகயீனம் வீட்டிற்கு அனுப்பிவைப்பு!!

வவுனியாவில் இன்று காலை பாடசாலைக்கு சென்ற மாணவி ஒருவருக்கு திடீர் சுகயீனம் காரணமாக காய்ச்சல் என்பதால் அவரை வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் இது குறித்து அந்தப் பகுதி பொது சுகாதார பரிசோதகரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மாணவி தொடர்பான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பாடசாலையில் அதிபர் தெரிவித்துள்ளார் .
இது குறித்து மேலும் தெரியவருகையில் ,
இன்று காலை வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு சென்ற தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு பாடசாலையில் திடீர் சுகயீனம் ஏற்பட்டுள்ளது . இதையடுத்து குறித்த மாணவி 11 மணியளவில் பாடசாலை அதிபரினால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் .
அத்துடன் இவ்விடயம் குறித்து அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கும் தகவல் வழங்கப்பட்டு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் இதனால் பாடசாலைக்கு எவ்விதமாக இடையூறுகளும் இன்றி பாடசாலை இடம்பெற்று வருவதாகவும் பெற்றோர்கள் அச்சமடையத் தேவையில்லை என்று மேலும் தெரிவித்துள்ளார் .
இது குறித்து அப்பகுதி சுகாதார பரிசோதகரிடம் தொடர்பு கொண்டபோது மாணவிக்கு சாதாரண காய்ச்சல் என்பதை தற்போது கூறி முடியும் இது குறித்து நாங்கள் தொடர்ந்து கண்காணிப்பில் இருப்போம் என்று தெரிவித்துள்ளனர்
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”
149 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!!
காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!
கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?
கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!
யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)
வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!