செட்டிகுளம் பகுதியில் 52 பேர் படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தலுக்கு பொலிசார் அனுமதி மறுப்பு!!

வவுனியா, செட்டிகுளம் பிரதேசத்தில் 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டமையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை அனுஸ்டிக்க செட்டிகுளம் பொலிசார் அனுமதி மறுத்துள்ளனர்.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு நாளை (02.12) செட்டிகுளம் பகுதியில் நடத்துவதற்கு பிரதேச சபையினரால் பொலிசாரிடம் அனுமதி கோரப்பட்ட நிலையிலேயே இன்று (01.12) அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொவிட் 19 தாக்கம் காரணமாக வவுனியா நீதிமன்றம் இந்நிகழ்வுக்கு தடை உத்தரவு வழங்கியுள்ளது எனவும், அதனால் அனுமதி வழங்க முடியாது எனவும் செட்டிகுளம் பொலிசார் தொலைபேசி ஊடாக தெரியப்படுத்தியுள்ளதாக செட்டிகுளம் பிரதேச சபை தவிசாளர் ஆசிர்வாதம் அந்தோணி தெரிவித்துள்ளார்.
கடந்த 1984 ஆம் ஆண்டு மார்கழி மாதம் 2 ஆம் திகதி செட்டிகுளம் பகுதியில் 52 தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”