;
Athirady Tamil News

ரியோ கேப்டன்சிக்கு எத்தனை ஸ்டார்.. ரம்யா, சனம்க்கு அவ்வளவு வெறுப்பு.. ஒரே அடியா பல்டி அடித்த பாலா! (வீடியோ, படங்கள்)

0

இரண்டாம் முறையாக ரியோ கேப்டன்சிக்கு வந்ததிலேயே மோசடி நடந்ததாக ஆரி போட்டு உடைத்து விட்டார். இந்நிலையில், இந்த வாரம் கேப்டனாக ரியோ எப்படி செயல்பட்டார். அவருக்கு எத்தனை ஸ்டார் கொடுக்க விரும்புறீங்க என கேட்ட கமல், ஸ்டார் போர்டையும் இறக்கி ஸ்டார் வாரை உண்டாக்கி விட்டார்.

ஒரு ஸ்டார் கூட கொடுக்க விரும்பலை என ரம்யா பாண்டியன் தனது கோபத்தை வெளிப்படுத்தியது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியது.

ஏமாற்றி ஜெயித்த ரியோ ஓரக் கண்ணாலே ஆரி எல்லாரையும் நோட்டம் விட்டு அவர்கள் செய்யும் குற்றங்களை கண்டுபிடித்து விடுகிறார். கேபி, தனது நெஞ்சில் ஸ்டிக்கை நிறுத்தி விளையாடியதை அப்பவே கண்டித்த ஆரி, ரியோ ரூல்ஸை மீறி சீட்டிங் பண்ணி விளையாடும் போதும் சொல்லி இருக்கலாம். கடுப்பில் விட்டுக் கொடுத்து ரியோவை கேப்டனாக்கி இந்த வாரம் நோகடித்து விட்டார்.

ரோலர் கோஸ்டர் ரைடு

கேப்டனாக ஆனதும் போதும், வைஸ் கேப்டனாக ஷிவானியை நியமித்ததில் இருந்து கடந்த வாரம் முழுக்க பிக் பாஸ் வீட்டு பெண் போட்டியாளர்களிடம் நல்லாவே மொத்து வாங்கிக் கட்டிக் கொண்டார் ரியோ. ரோலர் கோஸ்டர் ரைடில் போறது மாதிரி இருக்கு, முடியல என சொன்ன ரியோவை கடைசியா ஜெயிலுக்கும் அனுப்பி விட்டனர்.

கேப்டனுக்கு என்ன ரேட்டிங்

கஸ்டமர் கேர் டாஸ்க்கில் ஒவ்வொரு நிர்வாகிக்கும் ஸ்டார் ரேட்டிங் கொடுத்தது போல, கேப்டன் ரியோவுக்கு யாரெல்லாம் என்ன என்ன ரேட்டிங் கொடுக்க விரும்புறீங்களோ கொடுங்க, ரியோ நல்லா பார்த்து வைத்துக் கொண்டு, கம்மியா கொடுத்தவங்க கூட மறுபடியும் அடுத்த வாரம் சண்டை போடுங்க என அழகாக கொளுத்திப் போட்டார் கமல்.

4 ஸ்டார்

ரியோ ராஜின் கேப்டன்சி ரொம்ப நல்லாவே இருந்தது எனக் கூறிய சோமசேகர், ரியோவுக்கு 4 ஸ்டார்கள் கொடுத்தார். சின்ன குறைகளையும் சுட்டிக் காட்டினார். நிஷாவும் 4 ஸ்டார்கள் கொடுத்தார். அதன் பிறகு, அனிதாவும் 4 ஸ்டார்கள் ரியோவுக்கு கொடுத்து விட்டு, பர்ஸ்ட் அவுட் ஆனதுக்காக அவருக்கு ஸ்டார் கொடுக்காமல் இருப்பதை நான் விரும்பலை என்றார்.

3 ஸ்டார்

அர்ச்சனா, சம்யுக்தா, ஆரி, ஜித்தன் ரமேஷ், கேபி, ஷிவானி, ஆஜீத் என வரிசையாக எல்லோரும் ஒரே காரணத்தை சொல்லி ரியோவுக்கு மூன்று ஸ்டார்கள் கொடுத்தார்கள். ஆரி ஒவ்வொரு ஸ்டாருக்கும் ஒவ்வொரு ரீசன் சொல்லி கொடுத்தார். இதை தம்பி ரியோ வருங்காலத்தில் திருத்திக் கொள்வார் என நம்புகிறேன் என்றும் பாராட்டினார்.

விரும்பாத ரம்யா

கிச்சன் டீமில் ரம்யா பாண்டியனை நியமித்ததில் கிளம்பிய பூதம் இன்னமும் ரம்யா மனதில் அப்படியே இருக்கிறது. வெளியே என்னதான் சிரித்து நடித்தாலும், உள்ளுக்குள் விஷம் ரியோ ஜெயிலுக்கு போயிட்டு வந்தும் கொஞ்சம் கூட மாறவில்லை. ரியோவுக்கு நான் ஏன் ஸ்டார் கொடுக்கணும் எனக் கூறிய ரம்யா, கடைசியாக ஒரே ஒரு ஸ்டாரை சும்மா பேருக்கு கொடுத்தார்.

அசிங்க அசிங்கமா கேட்பேன்

ரம்யா பாண்டியனை தொடர்ந்து சனம் ஷெட்டியும் ரியோவுக்கு ஒரு ஸ்டார் கொடுத்தார். மேலும், ரியோ காமெடி என்கிற பெயரில் பண்ணும் மோசமான மேனரிசம் பற்றியும், ஷிவானி போட்டுக் கொடுத்த அசிங்க அசிங்கமா கேட்பேன் என்கிற வார்த்தையை வேற விதத்தில் எடுத்துக் கொண்ட சனம் ஷெட்டி, அதையும் கமல் முன்னாடி சொல்லி, ரியோவை நல்லாவே வெளுத்துவிட்டார்.

பல்டி அடித்த பயில்வான்

சனம் ஷெட்டியையும், ரம்யா பாண்டியனையும் ரியோவுக்கு எதிராக தூண்டி விட்ட பாலாஜி முருகதாஸ், ரியோவிடம் மன்னிப்பு கேட்டு சேர்ந்து விட்டு அப்படியே அவரது கட்சிக்கு தாவி விட்டார் என்றே தெரிகிறது. சம்யுக்தா வெளியேறி விடுவார் என்பதை தெரிந்து கொண்டு, நிஷாவுக்கு வெற்றி பெற வாழ்த்து சொன்ன பயில்வான், எல்லாரையும் விட ரியோவுக்கு 5 ஸ்டார் கொடுத்து மீண்டும் தனது வேற லெவல் கேமை விளையாடினார். சனம் ஷெட்டி மூஞ்சி அப்படியே பொசுங்கிப் போனது.

கமல் வார்னிங்

நீங்க இதை டிப்பாவோ, அட்வைஸாவோ, வார்னிங்காவோ எடுத்துக்கலாம் என ரியோவுக்கு சொன்ன கமல், ஜாலியா பேசுறேன், கலாய்க்கிறேன் என்கிற தொனியில் நீங்கள் செய்யும் விஷயங்கள் சிலருக்கு ஓவராகவும் தெரியலாம், சில நேரங்களில் தப்பாகவும் படலாம். அதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என ரியோவுக்கு கமல் சரியான வார்னிங் கொடுத்தார். இனிமேலாவது ஓவர் ரியாக்‌ஷனை நிறுத்துவாரான்னு பார்ப்போம்.

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

19 − two =

*