புயல் இலங்கையைக் கடக்கும் பாதை வரைபடத்தை வெளியிட்டது கூட்டு சூறாவளி எச்சரிக்கை மையம்!!

வங்காள விரிகுடாவில் தற்போது ஏற்பட்டு தாழ்வுநிலை சூறாவளியாக மாறி இலங்கையை நாளை மாலைக்கு பின் கடக்கவுள்ளது.
ஹவாய், பேர்ல் துறைமுகத்தில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படை – விமானப்படை கட்டளையகத்தால் முன்னெடுக்கப்படும் கூட்டு சூறாவளி எச்சரிக்கை மையம் (The Joint Typhoon Warning Center – JTWC) இலங்கை ஊடாக சூறாவளி கடக்கும் வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
அதன்படி 20 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டைக் கடக்கும் புயல் இதுவாகும்.
எனவே மின்சார இணைப்புகள் செயலிழப்பு, மரங்கள் முறிந்து வீழ்வது மற்றும் வேருடன் சாய்பவது உள்ளிட்டவை நடக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் மக்கள் திடமான கூரைகளைக் கொண்ட வீடுகளில் தங்குவது அல்லது நாளை மாலை முதல் பாதுகாப்பான தங்குமிடங்களுக்குச் செல்வது பாதுகாப்பானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”