;
Athirady Tamil News

சங்கானை மீன்சந்தை வியாபாரிகள் எவருக்கும் கொரோனா இல்லை!!

0

காரைநகர் கொரோனா தொற்றாளி நடமாடினார் எனத் தெரிவித்து தனிமைப்படுத்தப்பட்டிருந்த சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் மற்றும் சங்கானையை சேர்ந்த எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்படி தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம் நேற்று (30) பெறப்பட்ட மாதிரிகள் உட்பட 426 பேரின் மாதிரிகள் இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் மருத்துவபீட ஆய்வுகூடங்களில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

இவற்றில், வவுனியா தனிமைப்படுத்தல் நிலையத்தில் ஒருவருக்கும் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த இருவருக்குமாக மூவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை பணியாளர்களின் பெறுபேறுகள் நாளை மாலை வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × five =

*