;
Athirady Tamil News

ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் – இம்ரான் மஹ்ரூப் எம்.பி.!!

0

ஜனாசா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசால் முன்னெடுக்கப்படுகிறது. ஜனாஸா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

உலக சுகாதார ஸ்தாபனம் கூறும் விடயங்களை நடைமுறைப்படுத்துகின்ற அரசு ஏன் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதில் மட்டும் அவர்களின் வழிகாட்டல்களை பின்பற்றாமல் அடக்கம் செய்ய அனுமதிக்கவில்லை.

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனைப்படி எரிக்க வேண்டும் என கூறும் அரசு ஏன் மினுவான்கொடையில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன் நாட்டை முடக்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் கூறியபோது அதை கேட்கவில்லை.

இன்று ஜனாசா விடயத்தை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் உறவுகளில் குழப்பத்தை ஏற்படுத்தும் நடவடிக்கை அரசால் முன்னெடுக்கப்படுகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் ஜனாஸாவை அடக்க அனுமதி தாருங்கள் என்றே கோருகின்றார்களே தவிர அதை மன்னாரிலா யாழ்பாணத்திலா அம்பாந்தோட்டையிலா அடக்கம் செய்வது எனக் கேட்கவில்லை. எனவே இதை பயன்படுத்தி தமிழ் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உள்ள புரிந்துணர்வை குழப்ப வேண்டாம் என்றார்.

மஹர சிறைச்சாலையில் மோதல்: மேலும் 107 பேருக்கு காயம்!!

149 இலங்கையர்கள் கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்!!

பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்!

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

சுகாதார அதிகாரிகள் கொவிட்-19 உப கொத்தணிகள் உருவாகாது கட்டுப்படுத்த அதிகபட்ச முயற்சி எடுக்க வேண்டும்: GMOA!!

காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு; பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்!!

மஹர சிறைச்சாலை அமைதியின்மை – 4 பேர் பலி!!

கொரோனா வைரஸ் பரவல்- பிரதமர் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

கொழும்பிலிருந்து அல்லைப்பிட்டிக்கு வருகை தந்த 22 வயது இளைஞன் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி!!

தீவக வலய பாடசாலைகள் நாளை வழமை போல் இயங்கும் – இ.இளங்கோவன்!!

600 கைதிகளுக்கு பொது மன்னிப்பு – ஜனாதிபதி தீர்மானம்!!

யாழ்ப்பாணம் மாநகரில் திருநெல்வேலியில் தனியார் வைத்தியசாலையின் சேவைகள் இடைநிறுத்தம்!! (படங்கள்)

வேலணையில் வீதி திருத்தப் பணிக்கு வந்திருந்த தென்னிலங்கை பணியாளருக்கு கொரோனா தொற்று!!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமைக்கு திரும்பும் போக்குவரத்து சேவைகள்!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

five × one =

*