;
Athirady Tamil News

புதுக்குடியிருப்பு பொலிஸாரின் கொரோனா விழிப்புணர்வு நடவடிக்கை!!

0

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கொரோனா தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களை பாதுகாப்பாக இருக்க வழிவகுக்கும் வகையில் முச்சக்கர வண்டிகளுக்கு சமூக இடைவெளியினை பேணும் வகையில் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் துண்டுப்பிரசுரங்கள் ஒட்டப்பட்டுள்ளன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ஏ.அமரசிங்க தலைமையில் வீதி போக்குரவத்து பொலிசார் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உள்ள சுமார் 150 முச்சக்கர வண்டிகளுக்கு சமூக இடைவெளியினை பேணி கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க கோரி மீட்டரான வாழ்கை எனும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டு ஸ்ரிக்கர் ஒட்டியுள்ளனர்

சமூகத்தில் நாள்தோறும் வாடிக்கையாளர்கள் பலரை ஏற்றும் போதும் சமூக நடவடிக்கையின் போதும் எப்போதும் ஒரு மீட்டர் இடைவெளியினை கடைப்பிடிக்க முச்சக்கர வண்டிகளின் உரிமையாளர்களுக்கான சுகாதார அறிவுறுத்தல்கள் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு ஸ்ரிக்கர்கள் முச்சக்கர வண்டியில் ஒட்டிவைக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

20 + eight =

*